2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 08 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


உலக வங்கியின் உதவியுடன் டீ.எப்.சி.சி. வர்த்தக வங்கியின் மட்டக்களப்புக் கிளை ஏற்பாடுசெய்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு மட்டக்களப்பு பாடும் மீன் விடுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

'சந்தையில் உங்களை நிலைநிறுத்துவதன் மூலம் எவ்வாறு வெற்றியடைவது' என்னும் தலைப்பிலான இக்கருத்தரங்கு வங்கியின் முகாமையாளர் பிரேமிளா அருணாசலம் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக வங்கியின் பிரதி பொதுமுகாமையாளர் அருண் பெர்னாண்டோ, வங்கியின் உயரதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .