2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

இலங்கையின் தொழிலாளர் அணி வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைகிறது: ஆய்வின் மூலம் தகவல்

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தொழிலாளர் அணி வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை கொள்கைகள் கல்வியகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

30 வயதுக்குட்பட்ட தொழில் புரியும் அணியின் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், 30 வயதுக்கு மேற்பட்ட தொழில் புரியும் அணியின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

30 வயதுக்குட்பட்டவர்கள் அதிகளவு கல்விசார் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், தாம் 30 வயதை பூர்த்தி செய்த பின்னரே ஒரு தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்வது குறித்து தமது கவனத்தை செலுத்துகின்றனர். இதன் காரணமாக இலங்கையில் முதியவர்கள் தொழில் புரியும் வீதம் அதிகரித்துச் செல்கிறது.

தொழில் ரீதியில் மாற்றங்களையும், புதிய நுட்பங்களை உட்புகுத்தவும் இவர்களின் மூலம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இலங்கையில் தொழிலாளர் அணி தொடர்பாக காணப்படும் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் இந்த கல்வியகத்தின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .