2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் வருடாந்த திறன்காண் போட்டிகள்

A.P.Mathan   / 2012 நவம்பர் 16 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் வருடாந்த திறன்காண் போட்டிகள் 'பிரதீப 2012' எனும் தலைப்பில் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரியின் பிரதான அரங்கில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் 80இற்கும் அதிகமான ஜனசக்தியின் ஊழிய அங்கத்தவர்கள் தமது நடன திறமைகள் வெளிகாட்டியிருந்தனர். ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் வரலாற்றில் ஊழியர்கள் திறம்பட தமது திறமைகளை வெளிப்படுத்திய நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் தமது திறமைகளை இவர்கள் வெளிக்காட்டியிருந்தனர்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனசக்தி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் கலந்து கொண்டிருந்தார். நிறுவனத்தின் ஊழியர்களின் திறமைகளை இவர் பாராட்டி கௌரவித்தார். இந்த நிகழ்வு ஜனசக்தி விளையாட்டு மற்றும் பொதுநல கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .