2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

குறைவான இலங்கையரே கொழும்பு பங்குச்சந்தையில் முதலீடு: சரத் அமுனுகம

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலீடுகளை மேற்கொள்வதற்கு மிகவும் கவர்ச்சியான இடமாக கொழும்பு பங்குச்சந்தை காணப்பட்ட போதிலும், இலங்கையின் மொத்த சனத்தொகையில் 1 வீதத்துக்கும் குறைவானவர்களே கொழும்பு பங்குச்சந்தையில் முதலீடுகளை மேற்கொள்கின்றனர். இதற்கு பிரதான காரணம் சந்தை குறித்து போதிய விழிப்புணர்வு இன்மையே காரணமாக அமைந்துள்ளதென பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம கருத்து வெளியிட்டிருந்தார்.

'கொழும்பு பங்குச்சந்தையின் மூலம் சிறந்த பலன்களை பெற்றுக்கொள்வதற்கு முதலீட்டு சந்தையில் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறும் விதம் குறித்து இலங்கையர்கள் மத்தியில் ஆழமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் காணப்படுகிறது' என அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

'அரசின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முதலீட்டு சந்தையை ஊக்குவிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்கள், சந்தையை 2 – 3 வருடங்களில் சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை வழங்கும். அத்துடன், புதிதாக பட்டியலிட முன்வரும் நிறுவனங்களுக்கும் அனுகூலங்களை வழங்குவதாக அமையும்' என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .