2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மொபிடெலுக்கு 2012 மூன்றாவது காலாண்டில் அதிக இலாபம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 21 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தேசிய கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குநரான மொபிடெலின் வருமானம், இந்தத்துறையில் கடும் போட்டி நிலவிய போதிலும், தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. 2012ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களுக்கான வருமானம், அதற்கு முந்திய வருடத்துடன் ஒப்பிடுகையில், ரூபா 18.2 பில்லியன் என 14 சதவீதத்தினால் அதிகரித்தது. மொபிடெலின் சந்தாதாரரின் எண்ணிக்கை அதிகரித்ததே வருமான அதிகரிப்பிற்கான முக்கிய காரணமாகும். 2012 நடுப்பகுதியில் VIஆம் கட்ட விஸ்தரிப்புத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்தை அடுத்து, வாடிக்கையாளர் பெற்ற மேம்பட்ட நல்லனுபவம், வலையமைப்பு சக்திவளம் மற்றும் சேவைப் பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க மேம்பாடு என்பன வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக இணைப்புக்கள் வழங்கப்படுவதை நிச்சயித்தன.

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில், பலதரப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இலாபத்தைப் பெற்றுத்தரும் முக்கிய பிரிவுகளில் மொபிடெல் பெருமளவு வளர்ச்சியைக் கண்டது. EBITDA 20% வளர்ச்சியையும், EBIT 30% வளர்ச்சியையும் கண்டன. சிக்கனம், உற்பத்தி அபிவிருத்திக்கான வழிமுறைகள் நடைமுறைக்கிடப்பட்டதோடு, வருமான அதிகரிப்பும், இலாபத்தைப் பெற்றுத்தரும் முக்கிய பிரிவுகளில் வளர்ச்சி பெறப்படுவதற்கு காரணிகளாக அமைந்தன. EBITDA மற்றும் EBITDA MARGIN என்பனவற்றின் வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கைகள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தன. கவர்ச்சிகரமான 33 சதவீத மார்ஜினை நிறுவனம் பெற்றிருந்தது. முந்திய வருடத்தோடு ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அபிவிருத்தியாகும். நாணயப் பரிவர்த்தனையில் நட்டம் ஏற்பட்ட போதிலும், ஆய்வுக்குட்பட்ட வருடத்தில், PBT கவர்ச்சிகரமான 45 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

ரூபா நாணயத்தின் மதிப்பு ஓரளவு அதிகரித்ததன் பின்னணியில், வருமான அதிகரிப்பு ஏற்பட்டதை அடுத்து, மூன்றாவது தவணையின்போது பாராட்டத்தக்க வகையில், 01 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை மொபிடெல் பெற்றுக்கொண்டது. இதன்பலனாக, 2012 முதலாம் காலாண்டுக் காலத்தின்போது இடம்பெற்ற ரூபா மதிப்பிறக்கம் காரணமாக ஏற்பட்ட நட்டத்தையும், நிறுவனம் ஈடுசெய்ய முடிந்துள்ளது.

நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் டி சில்வா, நிறுவனத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக கருத்து வெளியிடுகையில், '2012 மூன்றாம் காலாண்டின்போது இடம்பெற்ற நிறுவனத்தின் செயற்பாட்டை பெரிதும் பாராட்ட முடியும்' என்று கூறினார். தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் துறையில் தனித்துவமான வளர்ச்சிக்கும், தலைமைத்துவத்திற்கும் வழிவகுக்கும் விதத்தில், இந்த வருடத்தில், எம்மையும் நாம் பணியாற்றும் விதத்தையும் மாற்றிக்கொள்வதில் நாம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளோம். மொபிடெலை உன்னத நிலைக்கு இட்டுச் செல்வதற்கான உந்து சக்தியை வழங்கவென, புதிய வழிமுறைகள், கொள்கைகள், செயல்முறைகள், தொழில்நுட்பக் கோட்பாடுகள் என்பனவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எமது நாட்டின் கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குநர் என்ற நிலையில் இலங்கையின் தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் மாற்றத்திற்கு தலைமை தாங்குதல், அரசாங்கத்தின் துரித அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இணைந்து செயற்படுதல், ஆசியாவின் அதிசயம் என்ற நிலை ஏற்படுவதற்கு நாட்டில் மாற்றங்களைக் கொண்டுவருதல் என்பனவற்றை அடைவதற்கென எம்மிடம் மாபெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .