2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

'சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலையாண்மை விருது'

A.P.Mathan   / 2013 ஜூலை 23 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை வர்த்தக சம்மேளனம் மீண்டும் ஒருமுறை உள்நாட்டில் சிறப்பாக வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாண்டு 'சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலையாண்மை விருது' (Best Corporate Citizen Sustainability Award) நிகழ்வினை நடாத்தவுள்ளது. 10வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் இத்தருணத்தில் இவ்வாண்டின் தொனிப்பொருளாக 'கூட்டாண்மை குடியுரிமையின் ஒரு தசாப்தத்தை கொண்டாடுதல்' என அமைந்துள்ளது. இவ்வாண்டு நிகழ்விலும் 10 முன்னணி கூட்டாண்மை நிறுவனங்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.
 
இந் நிகழ்வில் கடந்த பல ஆண்டுகளாக கூட்டாண்மை நிறுவனத்துறையில் வளர்ச்சிப் பண்புகளையும் கவனத்தையும் செலுத்தும் துறைசார் ஜாம்பவான்களாகிய ஜோன் கீல்ஸ், எயிட்கன் ஸ்பென்சஸ், ஹேலீஸ், சிங்கர், சிலோன் பிஸ்கட் லிமிடெட், டீசல் அன்ட் மோட்டார் எஞ்சினியரிங் (டீமோவின்), தேசிய அபிவிருத்தி வங்கி (NDB), பீபள்ஸ் லீசிங் மற்றும் பல அமைப்புகள் சமூகத்தின் மிகப்பெரிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பங்களிப்பை வழங்கிய கூட்டாண்மை நிறுவனங்கள் பல அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவ்வருட விருது வழங்கும் நிகழ்வில் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பினை ஏற்று அதனை ஊக்குவிக்கும் மற்றும் அப் பிரதேசத்தில் முன்மாதிரியாகவும் திகழும் நிறுவனங்களின் நிலையாண்மைக்கான வலுவான பங்களிப்பு அடையாளப்படுத்தவுள்ளது.
 
'கடந்த தசாப்தமானது இலங்கையின் கூட்டாண்மை குடியுரிமை துறையின் திருப்புமுனையாக அமைந்திருந்தது' என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பொது செயளாளர் ஹரின் மல்வத்த தெரிவித்தார். இவ் விருதானது தொடர்ச்சியாக மக்கள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்;தும் வெற்றிகரமான நிறுவனங்களை கௌரவிக்கிறது. இவ் விருதுகளின் முன்னோடியாக விளங்குவதன் காரணமாக சமூக மற்றும் சமூகம் சார் முன்முயற்சிகளில் ஈடுபடும் தொழில் தலைவர்களிடையே நாம் முன்மாதிரிகளை உருவாக்கியுள்ளோம்' என தெரிவித்தார்.
 
'இவ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் தனியார் மற்றும் பொதுத் துறையினர் விண்ணப்பிக்க முடியும்' என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் சமந்த ரணதுங்க தெரிவித்தார். இம்முறை பங்கேற்பவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், பல்வேறுப்பட்ட நிர்ணய அடிப்படையில் விண்ணப்பதாரிகளை தெரிவு செய்துள்ளோம். அனைத்து விண்ணப்பங்களும்; சமூக மேற்பார்வை, பணியாளர் தொடர்பு மற்றும் அபிவிருத்தி, வாடிக்கையாளர் மற்றும் சப்ளையர் தொடர்பு, சமூக தொடர்பு மற்றும் சமூக பொறுப்புணர்வு, பொருளாதார பங்களிப்பு, நிதி செயற்பாடுகள், நிர்வாகம் மற்றும் மதிப்பீடுகள் போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்பதை ரணதுங்க வலியுறுத்தினார்.
 
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 'சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலையாண்மை விருது' வழங்கும் நிகழ்வானது எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .