2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

நடப்பு ஆண்டில் எதிர்பார்க்கப்படும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மாற்றம்

A.P.Mathan   / 2013 ஜூலை 29 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டில் இலங்கைக்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
 
2013ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு மொத்தமாக வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.25 மில்லியனாக அமைந்திருந்தது. ஆயினும், ஆண்டின் முதல் அரைப்பகுதியில் நாட்டுக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 512,281 ஆக அமைந்திருந்தது. எனவே ஆண்டின் இறுதியில் வருகை தர எதிர்பார்க்கப்படும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வெள்ளிக்கிழமை ஹோட்டல் ஷோ 2013 குறித்த அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி டி.எஸ்.ஜயவீர இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X