2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

புதிய நிலக்கரி மின்னுற்பத்தி ஆலையை நிறுவ உகந்த பகுதி குறித்து ஆய்வு

A.P.Mathan   / 2013 ஜூலை 31 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த நிலக்கரி மின் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு உகந்த பகுதி குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் எம்.எம்.சி. பெர்டினான்டோ தெரிவித்துள்ளார்.
 
500 மெகாவாற்று மின்வலுவை உற்பத்தி செய்யக்கூடிய நிலக்கரி மின்உற்பத்தி ஆலையை தென்மேற்கு பரப்பில் அத்துரவெல பகுதியில் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆயினும், அந்த பகுதியில் மின்உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக, இந்த இடம் கைவிடப்பட்டிருந்தது. 
 
இந்த புதிய மின்உற்பத்தி ஆலை சூழலுக்கு பாதுகாப்பான வகையில் அமையவுள்ளது. இதன் மூலம் எவ்விதமான கழிவுகளும் சூழலுக்கு வெளியிடப்படாது, இந்த ஆலையை அமைப்பதற்கான முதலீடுகளை ஜப்பான் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X