2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

எசல பெரஹரவுக்காக தலதா மாளிகைக்கு வர்ணம் பூசும் லங்கெம் பெயின்ட்ஸ்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரொபியலக் பெயின்ட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டட், இவ்வருட எசல பெரஹரவை முன்னிட்டு முழு தலதா மாளிகைக்கும் வர்ணம் பூசவுள்ளது.
 
ஒன்பதாவது தொடர்ச்சியான ஆண்டாக முன்னெடுக்கப்படும் இந்த 'வண்ண பூஜை', வருடாந்த எசல பெரஹர ஆரம்பிப்பதற்கு முன்னர் நடத்தப்படும் பலவிதமான மதசடங்குகளின் ஓர் அங்கமாகவும் தலதா மாளிகையின் பாரம்பரியமாகவும் மாறியுள்ளது.
 
லங்கெம் சிலோன் லிமிட்டடின் பணிப்பாளர் ருவன் ரீ.வீரசிங்க தெரிவிக்கையில், 'கண்டி எசல பெரஹரவுக்காக மீண்டும் தலதா மாளிகைக்கு வர்ணம் பூசும் மிகப்பெரிய கௌரவமாக இது உள்ளது. மிகவும் கௌரவமான செயலுக்கு மேலாக, இதுபோன்ற செயல் மூலம் இலங்கையின் உயர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு பங்களிப்பு செய்வதை நாம் பெருமையாக கருதுகின்றோம். முழுமையான இலங்கை நிறுவனம் என்ற வகையில், இலங்கை மக்களுக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக உள்ளோம்' எனத் தெரிவித்தார்.
 
தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல பண்டார, ஒன்பதாவது தொடர்ச்சியான ஆண்டாகவும் எசல பெரஹரவுக்கு முன்னதாக தலதா மாளிகைக்கு வர்ணம் பூசும் லங்கெம்மின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
 
'ரொபியலக்' குறியீட்டு உற்பத்திகளை தயாரித்து சந்தைப்படுத்தும் லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டட், இலங்கையின் மிகப்பெரிய உள்ளூர் நிறப்பூச்சு உற்பத்தியாளராக உள்ளது. இத்துறையின் முன்னோடியாகவும் உள்ள இந்நிறுவனம், 28 ஆண்டுகளுக்கு அதிகமான அனுபவத்தைக் கொண்டுள்ளது. 
 
லங்கெம் உற்பத்திகள் decorative, industrial, epoxies, primers, ancillary, anti corrosives, auto refinish மற்றும் பலகை பராமரிப்பு உற்பத்திகள் போன்ற இலங்கை நிறப்பூச்சு பாவனையாளர்களுக்கான உற்பத்திகளை உள்ளடக்கியுள்ளது. பிரசித்திபெற்ற இத்தாலிய நிறுவனத்துடன் இணைந்து 'அக்குவாஷுல்ட்' குறியீட்டிலான நீர்த்தன்மையுள்ள வெளிப்புற பலகை பூச்சு வகைகளை  அண்மையில் லங்கெம் அறிமுகப்படுத்தியது.
 
ஏக்கலயில் அமைந்துள்ள லங்கெம் பெயின்ட் தொழிற்சாலை, தர முகாமைத்துவ முறைமைக்காக SLS ISO 9001:2008 தரச்சான்றிதழைப் பெற்றுள்ள முதலாவது நிறப்பூச்சு உற்பத்தி நிலையமாக உள்ளதுடன், SLS குறியீட்டுக்கு மேலதிகமாக சுற்றுச்சூழல் முகாமைத்துவ முறைமைக்காக ISO 14001 தரச்சான்றிதழ் பெற்ற முதலாவதும் ஒரேயொரு பெயின்ட் உற்பத்தியாளராகவும் திகழ்கின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--