.jpg)
வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களின் மூலமாக நாட்டுக்கு அனுப்பும் பணத்தில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த முதல் எட்டு மாத காலப்பகுதியில் மொத்தமாக 4333.5 மில்லியன் ரூபா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 10.9 வீத அதிகரிப்பாகும்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியின் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் 15.5 வீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதுடன் மொத்தமாக 89,761 சுற்றுலாப் பயணிகள் செப்டெம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மூலமான வருமானம் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் 98.7 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
அரச பிணைகளின் மூலமான வருமானம் 484.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக செப்டெம்பர் மாதத்தில் பதிவாகியிருந்தது.
முதல் எட்டு மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட நீண்ட காலக் கடன்களின் பெறுமதி 1128.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததுடன், கடந்த ஆண்டு இந்த காலப்பகுதியில் இந்த பெறுமதி 2330.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.