2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

வெளிநாட்டு வர்த்தகம் ஓகஸ்ட் மாதத்தில் அதிகரித்தது

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியான மூன்றாவது மாதமாக அதிகரித்த நிலையில் பதிவாகியிருந்தது. 2012 ஜனவரி மாதம் பதிவாகியிருந்த அதியுயர் பெறுமதியை தொடர்ந்து பதிவாகிய உயர்ந்த பெறுமதியான 918 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியிருந்தது.
 
இதேவேளை மொத்த இறக்குமதியில் சரிவு பதிவாகியிருந்ததாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. விவசாய உற்பத்திகளான தேயிலை மற்றும் வாசனைத்திரவியங்கள் ஓகஸ்ட் மாதத்தில் அதிகளவில் ஏற்றுமதியாகியிருந்தது. ஆயினும் இறப்பர் ஏற்றுமதி வருமானம் ஓகஸ்ட் மாதத்தில் சரிவை பதிவு செய்திருந்தது. ஆடை உற்பத்திகளும் ஓகஸ்ட் மாதத்தில் அதிகளவு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தந்த துறையாக பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--