2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

செலான் வங்கியின் விளையாட்டு பிரயோக மென்பொருள்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 25 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கியானது, விஷேடமாக உருவாக்கப்பட்ட டிக்கிரி கிப்ட் றஷ் (Tikiri Gift Rush) எனும் விளையாட்டு பிரயோக மென்பொருள் (Game App) ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்ததன் மூலம் உலக சிறுவர் தினத்தை இம்மாதம் கொண்டாடுகின்றது. இதனை ஒரு கணினியில், ஓர் அன்ட்ரொயிட் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் தொலைபேசியில் அல்லது பேஸ்புக் இல் விளையாடுவதற்கு முடியும்.
 
இதன்பிரகாரம், இலங்கையின் வங்கியியல் துறையில் இவ்வாறான சிறப்பம்சமான விளையாட்டு பிரயோக மென்பொருள் ஒன்றை முதன்முதலாக அறிமுகம் செய்த நிறுவனம் என்ற சாதனையை செலான் வங்கி பதிவு செய்கின்றது. 
 
இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாகும். இதனை விளையாடுபவர் வானத்திலிருந்து வீழ்கின்ற நாணயக் குற்றிகளை பிடித்து, அவற்றை 'வலை' ஒன்றுக்குள் சேகரிக்க வேண்டும். விளையாடும் சிறுவன் சேகரிக்கும் நாணயக் குற்றிகளுக்கு ஏற்ப, டிக்கிரி பரிசு வழங்கல் திட்டத்தின் கீழ் கிடைக்கக் கூடிய பரிசுகளை அவர் பெற்றுக் கொள்ளும் அதேநேரம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்லவும் முடியும். இப் பரிசுகள் அனைத்தும் முற்றுமுழுதான கற்பனையாக காணப்படுவதுடன், விளையாட்டின் ஒரு அங்கமாக மட்டுமே இருக்கும். 
 
செலான் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) ரிலான் விஜயசேகர கூறுகையில், 'இம் முயற்சியின் மூலம் முன்னோடியாக திகழ்வதையிட்டும் அதேபோல், விஷேடமாக வடிவமைக்கப்பட்ட இவ்வகையான விளையாட்டு பிரயோக மென்பொருளை இலங்கைச் சிறுவர்களுக்கு வெகுமதியாக அளிப்பதையிட்டும் செலான் வங்கி மிகவும் மகிழ்ச்சியடைகின்றது. நவீன தொழில்நுட்பத்தில் மிக விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, விளையாட்டுப் பிரயோக மென்பெருட்கள் உலகளவில் வெகுவாக பிரபல்யம் அடைந்துள்ளன. மேற்குறிப்பிட்ட விளையாட்டு பிரயோக மென்பொருளானது இரட்டை செயற்பாட்டைக் கொண்டதாகும். இந்த மென்பொருளானது களிப்பூட்டல்சார் பெறுமதியைக் கொண்;டிருப்பதற்கு மேலதிகமாக, சிறுவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு கருவியாகவும் இது தொழிற்படுகின்றது. எனவேதான், உலக சிறுவர் தினமும் முழு ஒக்டோபர் மாதமுமே வித்தியாசமானதொரு பரிமாணத்தை தற்போது எடுத்துள்ளது. அதன்மூலம் சமாந்திரமான ஒரு எண்ணக்கருவாக சேமிப்புப் பழக்கமும் ஊக்குவிக்கப்படுகின்றது' என்றார். 
 
2013 ஒக்டோபர் மாத காலப்பகுதியில் தமது பிள்ளைகளின் டிக்கிரி சேமிப்புக் கணக்கில் எந்தவொரு தொகையையும் வைப்புச் செய்வதன் மூலம், விளையாட்டு பிரயோக மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய கூப்பனை இலவசமாக பெற்றுக் கொள்வதற்கு செலான் டிக்கிரி கணக்கு வைப்பாளர்கள் அனைவருமே தகுதியுடையவர்களாவர். 
 
மேலும், எதிர்காலத்தில் வாடிக்கையாளராகவுள்ள நபர்களும் (15 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் பெற்றோர்கள்) இந்த வெகுமதியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.  அவர்கள் அருகிலுள்ள செலான் வங்கிக் கிளைக்கு விஜயம் செய்து டிக்கிரி கணக்கு ஒன்றை திறப்பதன் ஊடாக இதனைப் பெற்றுக் கொள்ள முடியும். 
 
சிறுவர்களை கவனத்தை ஈர்க்கும் வகையிலமைந்த இப் புதுமையான 'டிக்கிரி கிப்ட் றஷ் விளையாட்டு பிரயோக மென்பொருள்' நாடு முழுவதிலும் அமைந்துள்ள செலான் வங்கியின் எண்ணிலடங்கா சிறுவர் சேமிப்பு நிலையங்களில் தனது வெற்றியை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
டிக்கிரி கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டு 21ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாடெங்கும் இருக்கின்ற பல இலட்சக்கணக்கான சிறுவர் சேமிப்பாளர்களை அது கொண்டுள்ள வேளையில் -  மென்மேலும் சுபீட்சமான நாளைய தினத்திற்காக சேமிப்புடன் தொடர்புள்ள சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் இலங்கையின் வங்கியியல் துறையில் மற்றுமொரு முதன்முதலான முன்னெடுப்பை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதையிட்டு செலான் வங்கி பெருமிதம் கொள்கின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--