2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

ரூபாவின் பெறுமதி ஐந்து வாரங்களில் உயர்வாக பதிவு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஐந்து வாரங்களில் பதிவாகிய டொலருக்கு நிகரான உயர்ந்த ரூபாவின் பெறுமதி நேற்றைய தின கொடுக்கல் வாங்கல்களின் போது பதிவாகியிருந்ததாக நாணய மாற்று முகவர்கள் தெரிவித்திருந்தனர்.
 
வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு பெருமளவு பணம் அனுப்பப்படுவதால் இந்த பெறுமதியில் உயர்வு பதிவாகியிருந்ததாகவும், நேற்றைய தினம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 130.80 ரூபாவாக பதிவாகியிருந்ததாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 
பண்டிகைக்காலங்கள் நெருங்கிக் கொண்டிருப்பதன் காரணமாக, வெளிநாடுகளில் பணிபுரியும் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இலங்கையிலுள்ள தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்பி வைப்பது அதிகரித்து காணப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த காலப்பகுதியில் அதிகரித்துள்ளமையும், நாட்டினுள் அதிகளவு டொலர் உள்வருகைக்கு காரணமாக அமைந்துள்ளதாக முகவர்கள் அறிவிததுள்ளனர். பண்டிகைக்காலம் நிறைவடையும் வரை இந்த நிலை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .