2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

புதிய அலுவலக தொகுதியை அங்குரார்ப்பணம் செய்யும் அலுவியு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் முன்னணி அலுமினியம் கட்டமைப்பு மற்றும் நிர்மாணத்துறையை சேர்ந்த நிறுவனமான அலுவியு (பிரைவேற்) லிமிடெட் தனது புதிய அலுவலக தொகுதியை பொரல்லஸ்கமுவை பகுதியில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது இல. 50, தெஹிவளை வீதி, பொரல்லஸ்கமுவை). இந்த புதிய அலுவலகத் தொகுதியை வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் பொறியியல் சேவைகள் துறை அமைச்சர் விமல் வீரவன்ச அங்குரார்ப்பணம் செய்திருந்தார்.
 
இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 100க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு அலுவியு (பிரைவேற்) லிமிடெட் தனது சேவைகளை வழங்கி வருகிறது. தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தனது வாடிக்கையாளர் தளம் மற்றும் சேவை வழங்குநர்களுடனான தொடர்பாடலை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய அலுவலக தொகுதியை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. 
 
மறுசீரமைப்பு செய்யப்பட்ட கம்பனியின் இணையத்தளமும் இதே தினத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கம்பனியின் செயற்பாடுகள் தொடர்பாகவும், புதிய தயாரிப்புகள் மற்றும் சாதனைகள் தொடர்பில் பொது மக்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கும் வகையில் இந்த இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
 
அலுவியு (பிரைவேற்) லிமிடெட், 1996 ஆம் ஆண்டில், அலுமினியம் கட்டமைப்பு, அலுவலக இடப்பிரிப்புகள், கட்டட நிர்மாணப் பொருட்கள் இறக்குமதி, நிர்மாண ஒப்பந்தங்கள் மற்றும் பாரிய அளவிலான கட்டட நிர்மாணத் திட்டங்களுக்கு அவசியமான ஆலோசனைகளை வழங்கும் வகையில் அமைந்திருந்தன. இது ICTAD இன் கீழ் பதிவு செய்யப்பட்ட கம்பனி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், அலுவியு (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் லக்ஷ்மன் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் முன்னணி அலுமினியம் கட்டமைப்பு நிறுவனம் எனும் வகையில், நாம் அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர்களையும் விநியோகத்தர்களையும் கொண்டுள்ளோம். இவர்கள் எமது பகுதிக்கு நாளாந்த அடிப்படையில் விஜயம் செய்கின்றமையாலும், அதிகரித்து வரும் எமது வாடிக்கையாளர் தளத்துக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையிலும் இந்த புதிய அலுவலகத்தை அங்குரார்ப்பணம் செய்துள்ளோம். அதிகளவு இடவசதி படைத்த மற்றும் எமது பொருட்களை தெளிவாக காட்சிப்படுத்தக்கூடிய பகுதியையும் நாம் இதற்காக தெரிவு செய்திருந்தோம்' என்றார்.
 
பெர்ணான்டோ தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'அலுவியு கம்பனி, புதிய கண்டுபிடிப்பில் அமைந்த தெரிவுகளை AV எனும் வர்த்தக நாமத்தில் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய அலுவலகம் இந்த புதிய தெரிவுகளை காட்சிப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கும்' என்றார்.
 
இந்த ஆண்டு இலங்கை கட்டடக்கலை வடிவமைப்பாளர் சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த விற்பனை கண்காட்சியின் போது சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் வர்ணமயமான காட்சிகூடத்துக்கான விருதை அலுவியு (பிரைவேற்) லிமிடெட் தனதாக்கியிருந்தது.
 
இலங்கையில் அலுமினியம் நிர்மாணத்துறையில் முன்னெடுத்திருந்த பாரிய திட்டங்களாக, ரஜரட்ட பல்கலைக்கழகம், கெத்தாரம சர்வதேச கிரிக்கெட் மைதானம், அநுராதபுரம், புத்த ஷ்ரவக்க பிக்கு பல்கலைக்கழகம் மற்றும் டொல்பின் ஹோட்டல், வாய்க்கால, சீசான்ட் அளுத்கமை மற்றும் அவானி, களுத்தறை ஆகியவற்றை குறிப்பிட முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .