2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

நெல்லியடியில் இலங்கை வங்கிக்கிளை திறப்பு

Kogilavani   / 2014 மார்ச் 31 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-ற.றஜீவன்


யாழ். நெல்லியடி நகரில் 60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கை வங்கியின் கிளை திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் சிரேஷ்ட உதவிப் பொது முகாமையாளர் எம்.எஸ்.முதியான்சே மேற்படி கிளையினை சம்பிரதாயப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

வடமராட்சியில் முதன்முதலாக பாதுகாப்புப் பெட்டக வசதிகள் இந்த வங்கிக்கிளையில்  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நெல்லியடி பிரதேசத்தின் வர்த்தக தலைவர் எஸ்.அகிர்ததாஸ், குறித்த கிளையின் முகாமையாளர் எஸ்.செந்தில்நாதன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மேற்படி கிளையினை இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் டி.எஸ்.குணசேகர திறந்து வைப்பதாக இருந்தபோதும் அவர் வருகை தராமையினால் முதியான்சே திறந்து வைத்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .