2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

உலக பொருளாதார வளர்ச்சி எதிர்வு கூறலை குறைத்துள்ள சர்வதேச நாணய நிதியம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக, 2014 இன் உலக பொருளாதார வளர்ச்சி வீத எதிர்வுகூறலை 0.1 வீதத்தால் குறைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

உலக பொருளாதார நிலை வளர்ச்சியடையும் நிலையை எய்தியிருந்த போதிலும், ரஷ்யா மற்றும் உக்ரேனியல் காணப்படும் நெருக்கடியான நிலை மற்றும் யூரோ வலயத்தில் நிலவும் திட்டமிடப்படாத வகையில் நாணயக் கொள்கை கையாள்கை ஆகியவற்றின் காரணமாக இந்த எதிர்வுகூறலை தாம் குறைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

2013இல் உலக பொருளாதாரம் 3.0 வீதம் வளர்ச்சியடைந்திருந்த நிலையில், 2014 இல் இந்த பெறுமதி 3.6 ஆக அமைந்திருக்குமெனவும், 2015 இல் 3.9 ஆக உயர்வடையுமென சர்வதேச நாணய நிதியம் வருடத்தின் முற்பகுதியில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--