2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

அரநாயக்க சமூகத்தின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனசக்தி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 20 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


மண் அரிப்பை தடுக்கும் வகையில் அரநாயக்க பிரதேசத்தில் 1500 தாவரக்கன்றுகளை நடும் செயற்திட்டத்தில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் பங்கேற்றிருந்தது. இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், மாவட்ட அலுவலக அதிகாரிகள் மற்றும் மத குருமார்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறு பயிரிடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட மரங்களை ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் கவனமாக தெரிந்தெடுத்து, குறித்த பிரதேசத்துக்கு வழங்கியிருந்தது. இந்த தாவரங்கள் காலப்போக்கில் உயர்ந்த பொருளாதார ரீதியான அனுகூலங்களை வழங்கும் வகையில் அமைந்திருந்தன. இந்த தாவரக் கன்றுகளில் பாக்கு, கும்புக், நந்துன் மற்றும் ஹல்மில்லா போன்ற தளபாடங்கள் தயாரிப்புக்கு உபயோகிக்கக்கூடிய வலிமையான மரங்கள் உள்ளடங்கியிருந்தன.

மஹா ஓயா ஆற்றின் கரையோரப்பகுதியை மண் அரிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தமது அர்ப்பணிப்பான பங்களிப்பை வழங்கும் வகையில் ஜனசக்தி இந்த மர நடுகை செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில், லங்கா ஜலனி-இலங்கை நீர் பங்காண்மை (SLWP) செயற்திட்டத்துடன் ஜனசக்தி கைகோர்த்திருந்ததுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட நீர் தர பரிசோதனை செயற்திட்டத்தின் ஆலோசகர்களாகவும் இணைந்து கொண்டது.

ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் அங்கத்தவர்கள் இந்த திட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். 'நான் இந்த திட்டத்தில் பங்குபற்றுவது இதுவே முதலாவது தடவையாகும். அலுவலகத்திலிருந்து வெளிச்சென்று, நேரடியாக இந்த திட்டத்தில் பங்கேற்று, அரநாயக்க பகுதியைச் சேர்ந்த சமூகத்துக்கு நிலையான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதில் அங்கம் வகித்திருந்தது என்பது புதுவித அனுபவமாக அமைந்திருந்தது' என சந்தைப்படுத்தல் செயற்படுத்தல்கள் பிரிவின் சிரேஷ்ட உதவி முகாமையாளர் கெலும் வீரசிங்க கருத்து தெரிவித்திருந்தார். சமூகத்தைச் சேர்ந்த 20 பாடசாலை மாணவர்களுடன் இணைந்து இவரும் இளம் தாவரக்கன்றுகளை நாட்டியிருந்தார்.

உள்நாட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வருமானத்தை தேடிக் கொள்ளும் வகையில், ஆற்றுமணல் அள்ளும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செயற்பாடு பாரதூரமான மண் அரிப்பு பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது. புதிதாக பயிரிடப்பட்டுள்ள தாவரங்களின் மூலமாக குறித்த சமூகத்தவர்களுக்கு மாற்று வருமான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வின் போது ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் விருது வென்ற சிறுவர்களுக்கான சிங்கள ஆவணத்திரைப்படமான 'மௌஸ்' எனும் திரைப்படத்தையும் இப்பகுதி மக்களுக்கு திரையிட்டுக் காண்பித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--