2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மைக்ரோமெக்ஸ் அறிமுகம் செய்யும் அன்ட்ரொயிட் வன் அலைபேசி

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகர்வோர் அனுபவத்தை மீளமைக்கும் வகையில் இலங்கையின் மைக்குரோமெக்ஸ் இன்ஃபோர்மெடிக்ஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் முன்னணி பங்காண்மை ஒன்றை ஏற்படுத்தியுள்ளதன் மூலமாக அன்ட்ரொயிட் வன் சாதன கட்டமைப்பிலமைந்த Canvas A1 கையடக்க தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அறிவித்தலுக்கமைவாக, இலங்கையில் அன்ட்ரொயிட் வன் ரக சாதனங்களை பாவனையாளர்களுக்கு அறிமுகம் செய்யும் முதலாவது கையடக்க தொலைபேசி நாமமாக மைக்குரோமெக்ஸ் அமைந்துள்ளது.

இந்த கையடக்க தொலைபேசி உயர் தரம் வாய்ந்த அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதுடன், அன்ட்ரொயிட் KitKat 4.4 கட்டமைப்பில் இயங்குகிறது. அன்ட்ரொயிட் புதிய வெளியீடான Lollipop மென்பொருளை மெருகேற்றமாக வழங்கவுள்ள முதலாவது கையடக்க தொலைபேசியாக அமைந்துள்ளது. கூகுளின் புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட பற்றரி, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு உள்ளம்சங்கள் மற்றும் ஸ்மார்ட் அறிவுறுத்தல் போன்றன இந்த புதிய மெருகேற்றத்தில் உள்ளடங்கியிருக்கும். எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு கூகுளிடமிருந்து புதிய மெருகேற்றங்களை நேரடியாக பெற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

வன் பொருளை பொறுத்தமட்டில், 4.5” IPS திரையை கொண்டுள்ளது. 2MP முன்புற மற்றும் 5MP பின்புற கமராவை கொண்டுள்ளது. 1GB RAM, 4GB ROM, வேகமான 1.3 GHz quad-core processor, நீண்ட பற்றரி ஆயுள் காலம், இரட்டை SIM பயன்படுத்தக்கூடிய வசதி, FM ரேடியோ டியுனர், microSD உள் செலுத்தக்கூடிய வசதி போன்றவற்றை கொண்டுள்ளது.

Canvas A1 என்பது பெருமளவான appகளை இயங்கச் செய்யும் வசதியை கொண்டிருக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நண்பர்களுடன் உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும் என்பதுடன், சமூக வலைத்தளங்களினூடாக தொடர்பில் இருக்கலாம். மேலும் செய்திகள், காலநிலை மற்றும் விளையாட்டுகளை அனுபவிக்கலாம். கூகுள் appகளான Gmail, Google Search மற்றும் Google Translate போன்றவற்றையும் இந்த கையடக்க தொலைபேசியில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அறிமுகம் தொடர்பில் மைக்குரோமெக்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வணிக செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி அமித் மதுர் கருத்து தெரிவிக்கையில், 'இன்றைய காலகட்டத்தில் பெருமளவான வாடிக்கையாளர்கள் அடிக்கடி மெருகேற்றமடையும் OS வசதிகளை கொண்ட ஸ்மார்ட்ஃபோன் வகைகளை எதிர்பார்க்கின்றனர். கூகுள் உடனான எமது பங்காண்மையின் மூலமாக Canvas A1 கையடக்க தொலைபேசி அடுத்த இரண்டு வருடங்களுக்கு மென்பொருள் மெருகேற்றங்களை நேரடியாக வழங்கக்கூடியதாக இருக்கும்| என்றார்.

'Canvas A1 என்பது உயர் தரம் வாய்ந்த கையடக்க தொலைபேசியாகும், சகல இலங்கையர்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. வன்பொருள், மென்பொருள் மற்றும் இணைப்பு ஆகியவற்றுக்கிடையில் சிறந்த பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது' என மேலும் குறிப்பிட்டார்.

கூகுள் நிறுவனத்தின் பொருட்கள் நிர்வாக செயற்பாடுகளுக்கான உப தலைவர் சீசர் சென்குப்தா கருத்து தெரிவிக்கையில், 'மைக்குரோமெக்ஸ் இன்போர்மெடிக்ஸ் உடன் கைகோர்த்து அன்ட்ரொயிட் வன் ரக கையடக்க தொலைபேசியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முன்வந்துள்ளதையிட்டு கூகுள் மகிழ்ச்சியடைகிறது. உயர் தரம் வாய்ந்த, சகாய விலையில் அமைந்த அன்ட்ரொயிட் சாதனங்களை இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இதன் மூலம் எமக்கு முடிந்துள்ளது. மைக்குரோமெக்ஸ் இன்போர்மெடிக்ஸ் உடன் இணைந்து நாம் அடுத்த கட்டமாக மேலும் வாடிக்கையாளர்களுக்கு வலுச் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

மைக்குரோமெக்ஸ் Canvas A1 கையடக்க தொலைபேசி ஒன்றின் விலை 15,990 ரூபாவாக அமைந்திருக்கும் என்பதுடன், இலங்கையின் முன்னணி விற்பனையகங்களிலிருந்து ஜனவரி மாத மையப்பகுதியிலிருந்து வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்து கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு www.micromaxinfo.com/SL எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .