2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

அசல் உதிரிப்பாகங்களை பயன்படுத்துங்கள்: பிரஷாந்த

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன உரிமையாளர்களுக்கு, தமது வாகனங்களை முறையாக பராமரிப்பு என்பது அதிகளவு முக்கியத்துவம் பெறுகிறது. முறையான வாகன பராமரிப்புக்கு, காலாகாலத்தில் வாகனங்களின் சகல உதிரிப்பாகங்களும் இயங்கும் நிலையில் இருப்பதை பரிசோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பரிசோதிக்கும் போது, ஏதேனும் உதிரிப்பாகத்தில் கோளாறு காணப்படுமாயின் அவற்றை மாற்றிக் கொள்வது இன்றியமையாத தேவையாக அமைந்துள்ளது. 

வாகன உதிரிப்பாக சந்தையை பொறுத்தமட்டில் பெருமளவு விற்பனை நிலையங்கள் நாடு முழுவதிலும் காணப்படுகின்றன. அவற்றில் நம்பகமான இடத்துக்கு சென்று அசல் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வது எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் உதிரிப்பாகங்கள் பிரிவுக்கான பதில் பொது முகாமையாளர் பிரஷாந்த வைத்தியரட்ன கருத்து தெரிவிக்கும் போது,

இலங்கையை பொறுத்தமட்டில் வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களை பராமரிப்பதில் அதிகளவு அக்கறை செலுத்துகின்றனர். ஆனாலும், அவர்கள் தமது வாகனங்களின் வினைத்திறனை பரிசோதிக்கும் போது ஏதேனும் ஒரு உதிரிப்பாகத்தை புதியதை கொண்டு மாற்றீடு செய்ய நேரும் பட்சத்தில் அசல் உதிரிப்பாகம் அதிகளவு விலை கொடுத்து வாங்கப்பட வேண்டியுள்ளதால் போலியான தரம் குறைந்த விலையிலும் குறைந்த உதிரிப்பாகங்களை நாடுகின்றனர். 

இதன் காரணமாக பல பிரதிகூலங்களை வாகன உரிமையாளர்கள் அனுபவிக்க நேரிடலாம். அவற்றில், வாகனத்தில் பயணிக்கும் முழு குடும்பத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. குறிப்பாக அசல் உதிரிப்பாகங்களை பொறுத்தமட்டில் விலையில் சற்று உயர்வாக காணப்பட்ட போதிலும், அவற்றின் வினைத்திறன் என்பது பரிசோதனை ரீதியில் உறுதி செய்யப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்டவையாகும். எனவே, அவற்றை மாற்றீடாக பயன்படுத்தும் போது, இடைநடுவே பழுதடைவது என்பதற்கான சாத்தியக்கூறுகள் பெரிதும் குறைவு. ஆனாலும், போலியான உதிரிப்பாகங்களை பயன்படுத்துவதன் காரணமாக, குறைந்த செலவீனத்தில் காணப்பட்ட போதிலும், அவற்றின் வினைத்திறனுக்கு உத்தரவாதங்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது என்பதுடன், குடும்பத்தாருடன் நெடுதூர பயணங்களில் ஈடுபடும் போது, இடைநடுவே செயலிழந்து போகக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. அத்துடன், போலியான உதிரிப்பாகங்களை பயன்படுத்துவதன் காரணமாக வாகனத்தின் மதிப்பு குறைகிறது இதன் காரணமாக, என்றோ ஒரு நாள் வாகனத்தை விற்க நேரும் போது, சந்தை விலையை விட பெருமளவு குறைவான விலைக்கு விற்பனை செய்ய நேரிடும். 

மேலும், போலியான உதிரிப்பாகங்களை அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த நாம் ஒரு போதும் பரிந்துரைப்பதில்லை. நாடு முழுவதும் எமது அங்கீகாரம் பெற்ற முகவர்கள் காணப்படுகின்றனர். எமது சேவை நிலையத்துக்கு வருகை தரும் வாகனங்களுக்கு நாம் எப்போதும் அசல் உதிரிப்பாகங்களை பயன்படுத்துகிறோம். அதுபோலவே எமது விநியோகத்தர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வேளையும் அசல் உதிரிப்பாகங்களை வழங்குமாறு நாம் பரிந்துரைத்துள்ளோம். எமது அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் கிளைகளில் போலியான உதிரிப்பாகங்கள் இல்லை என்பதை எம்மால் உறுதியாக கூற முடியும். எமது அசல் உதிரிப்பாகங்களில் halogen ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும். இவற்றை கொண்டு அசல் உதிரிப்பாகங்கள் என்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும், கொழும்பு நகருக்கு அப்பால் காணப்படும் வாடிக்கையாளர் ஒருவர் எமது ஏதேனும் கிளை அல்லது அங்கீகாரம் பெற்ற விற்பனை நிலையத்துக்கு சென்று, குறித்த அசல் உதிரிப்பாகம் ஒன்றை கோரும் பட்சத்தில் குறித்த நிலையத்தில் அந்த பாகம் இல்லாவிடில், அவற்றை ஓடர் செய்து மறுதினம் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. இதற்காக எம்மிடம் விசேட கூரியர் சேவை ஒன்றும் நடைமுறையிலுள்ளது. குறித்த உதிரிப்பாகத்தின் பெறுமதியை வாடிக்கையாளர் முழுமையாக செலுத்தி, அவற்றை 24 மணி நேரத்தினுள் பெற்றுக் கொள்ளலாம். 

அத்துடன், புதிய வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் பெருமளவில் முழுமையான வாகன காப்புறுதியை பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு முழுமையான வாகன காப்புறுதியை கொண்டிருக்கும் போது, குறித்த வாகனத்தில் ஏதேனும் பழுதுபார்ப்புகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில், அவற்றை மாற்றுவதற்கு அசல் உதிரிப்பாகங்களை பயன்படுத்துமாறு கோருவதற்கு வாடிக்கையாளர்களுக்கு முழு அதிகாரமும் உண்டு. சில காப்புறுதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தவறான அறிவுரைகளை வழங்கி போலி உதிரிப்பாகங்களை பயன்படுத்த தூண்டுகின்றன. 

அசல் உதிரிப்பாகங்கள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவை. குறைந்த விலையில் கொள்வனவு செய்து பொருத்தப்படும் தரங் குறைந்த உதிரிப்பாகங்களை அடிக்கடி மாற்ற வேண்டிய தேவை எழலாம். அதாவது அசல் உதிரிப்பாகத்தின் ஆயுள் காலப்பகுதியினுள், சில வேளைகளில் போலியான உதிரிப்பாகங்களை இரண்டு மூன்று தடவைகள் கூட மாற்ற வேண்டி ஏற்படலாம். இதனால் செலவீனம் மேலும் அதிகமானதாக அமைந்திருக்கும்.

உங்கள் வாகனங்களின் மேல் அன்பு செலுத்துங்கள், எப்போதும் அசல் உதிரிப்பாகங்களை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களின் நலனுக்கும், சூழலுக்கும் பாதுகாப்பானதாக அமைந்திருக்கும் என குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X