2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மீண்டும் Galle Literary Festival

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி இலக்கிய நிகழ்வான, Galle Literary Festival, அடுத்த வருடம் முதல் ஐந்து தினங்கள் இடம்பெறவுள்ளதுடன், இதற்கு Fairway Galle Literary Festival 2016 என பெயரிடப்பட்டுள்ளது. 2016, ஜனவரி 13 ஆம் திகதி இந்நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச ரீதியில் மற்றும் உள்நாட்டளவில் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்வில் சர்வதேச ரீதியிலும், உள்நாட்டளவிலும் புகழ்பெற்ற இலக்கியத்துறையுடன் தொடர்புடையவர்கள் பங்குபற்றவுள்ளனர். இதில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வரலாற்றியலாளர்கள், கவிஞர்கள் மற்றும் சுயசரிதவியலாளர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

2016 இல் இடம்பெறவுள்ள நிகழ்வை ஏற்பாடு செய்யும் குழுவினர், இந்நிகழ்வின் பிரதான அனுசரணையாளராக Fairway Holdings நிறுவனத்தை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கமைய, அவர்களுடன் நெருக்கமான முறையில் இணைந்து செயலாற்ற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளராக Fairway Holdings திகழ்கிறது. அடுத்த மூன்றாண்டு காலப்பகுதியில், இந்நிறுவனம் பிரதான அனுசரணையை வழங்க கைகோர்த்துள்ளது. மேலும், இந்நிறுவனம் 2016 இல் நடைபெறும் நிகழ்வுக்கு Fairway இலக்கிய விருதுக்கான அனுசரணையை வழங்கவுள்ளது. இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலமைந்த நாவல்;களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமைந்திருக்கும்.  ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியீட்டுவோருக்கு 500,000 ரூபாய் அன்பளிப்புத் தொகையாக வழங்கப்படும். தெரிவு செய்யப்படும் புத்தகங்களுக்கு தலா 100,000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

2016 Fairway Galle Literary Festival நிகழ்வுக்கு பிரதான அனுசரணை வழங்கும் Fairway Holdings நிறுவனத்தின் தலைவர் ஹேமக டி அல்விஸ் கருத்து தெரிவிக்கையில், 'Galle Literary Festival என்பது சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிகழ்வாக உயர்ச்சியடைந்துள்ளது. இந்நிகழ்வுடன் கைகோர்த்துள்ளமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நிகழ்வுக்கு நிதி உதவிகளை வழங்குவது என்பதற்கு மட்டும் மட்டுப்படாமல், அதற்கு அப்பாற்பட்டதாக எமது ஈடுபாடு அமைந்துள்ளது. மேலும், இலங்கையில் இலக்கியச்சிறப்புக்கு வெகுமதியளித்து ஊக்குவிப்பது எமது நோக்கமாக அமைந்துள்ளது. சகல சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளும், எமது சமூகத்தை முன்னேற்றுவது, மேம்படுத்துவது மற்றும் சிறப்படையச் செய்வதாக அமைந்திருக்க வேண்டும். இதுபோன்ற பல செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கிறோம், இவை சமூக வாழ்க்கை, கல்வி மற்றும் கலை அம்சங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன' என்றார். 

'இந்த ஆண்டு இடம்பெறும் Galle Literary Festival இல் நாம் Fairway தேசிய புத்தக விருதை அறிமுகம் செய்யவுள்ளோம். இதன் மூலம், தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் காணப்படும் சிறந்த எழுத்தாளர்களை நாம் கௌரவிக்கவுள்ளோம். இந்த கௌரவிப்பின் மூலம், இலங்கையின் எழுத்தாளர்களை ஊக்குவித்து, இலக்கியச் சிறப்பை நோக்கி கொண்டு செல்வதை நோக்காக கொண்டுள்ளோம். Galle Literary Festival க்கான எமது அர்ப்பணிப்பு என்பது அதன் நீண்ட கால செயற்பாடுகளுக்கான உதவிகளை வழங்கலுடன், இலங்கையின் வௌ;வேறு பகுதிகளைச் சேர்ந்த பரந்த சமூகத்தினருக்கு இந்நிகழ்வு பற்றிய விழிப்புணர்வை கொண்டு செல்வதற்கு உதவும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அமைந்துள்ளது. இது படிப்படியாக வளர்ச்சியடையும் என நாம் எதிர்பார்க்கிறோம்' என மேலும் குறிப்பிட்டார். 

மேலதிகமாக, Fairway Galle Literary Festival 2016 இல் முதல் தடவையாக தெற்காசிய இலக்கியத்துக்கான DSC விருதை வழங்க முன்வந்துள்ளது. 2015 விருதுகள் வழங்கலின் போது இந்திய அமெரிக்கரான ஜும்பா லஹிரி 'The Lowland' க்காக விருது வழங்கப்பட்டிருந்தது. 2012 இல் இலங்கையின் ஷிஹான் கருணாதிலகவுக்கு 'Chinaman' க்காக விருது வழங்கப்பட்டிருந்தது.

சுரினா நருலா மற்றும் மன்ஹட் நருலா இணைந்து DSC விருதை 2010 இல் அறிமுகம் செய்திருந்தனர். 'தெற்காசிய இலக்கியத்துக்கான 50,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த DSC விருது என்பது மிகவும் பெருமைக்குரிய சர்வதேச இலக்கிய விருதுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இது ஐந்து வருடங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் திறமை வாய்ந்த எழுத்தாளர்களின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் அமைந்துள்ளதுடன், சர்வதேச பார்வையாளர்கள் பெருமளவானோருக்கு வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. இது மிகவும் பிரத்தியேகமானதும், அதிகளவு எதிர்பார்க்கப்படும் பரிசாகவும் அமைந்துள்ளது. தெற்காசியா மற்றும் அதன் மக்களைப் பற்றிய எழுத்தாக்கத்தை படைக்கக்கூடிய எந்தவொரு இனம் அல்லது தேசியத்தைச் சேர்ந்தவர்களுக்கு பங்குபற்றக்கூடிய வகையில் அமைந்துள்ளது' என சுரினா நருலா தெரிவித்தார். 

நருலா கருத்துத் தெரிவிக்கையில் 'Galle Literary Festival உடன் இந்த ஆண்டில் நாம் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் பெருமையடைகிறோம். தெற்காசிய இலக்கிய விருதுகள் 2016 க்கான DSC பரிசு, 2016 ஜனவரி 16 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய இலக்கிய திருவிழாவாக திகழும் இந்நிகழ்வு, தெற்காசிய பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டமைந்துள்ளன. இந்த பங்காண்மையில் நாம் அதிகளவு நேர்த்தியான விடயங்களை இனங்கண்டுள்ளோம். தெற்காசியாவின் உள்ளம்சங்களுக்கமைய, DSC பரிசுக்காக தெற்காசிய நாடுகளின் வௌ;வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர்' என்றார்.   

வார இறுதி இரு நாள் நிகழ்வுகளுக்கு மேலதிகமாக 2016 ஆம் ஆண்டுக்காக புதிய, விறுவிறுப்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் கண்டி நகரில் இரு மினி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கண்டி நகரில் இடம்பெறவுள்ள மினி நிகழ்வு 2016 ஜனவரி 9 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு 2016 ஜனவரி 23ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இவை இரண்டிலும் சர்வதேச மற்றும் உள்நாட்டு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பரந்தளவு இலக்கிய மற்றும் கலை அம்சங்களை வெளிப்படுத்தவுள்ளனர். இதன் போது, பாரம்பரிய முக்கிய பங்கை வகிக்கவுள்ளது. 

அதன் பாரம்பரிய இலக்கிய முறையை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ள இந்த ஆண்டின் கொண்டாட்டம், கடந்த ஆண்டுகளைப் போலவே, முழு அளவிலான plays, concerts, art installations, fashion shows, garden மற்றும் architectural tours, gastronomical journeys, community initiatives, photographic exhibitions மற்றும் பல இதர நிகழ்வுகளையும் கொண்டிருக்கும்.

இந்த ஆண்டு Electric Peacock Festival இன் இணைத்தாபகர்கள், Fairway Galle Literary Festival 2016 உடன் கைகோர்த்துள்ளமை தொடர்பில் அறிவிப்பதில் பெருமையடைகின்றனர். Electric Peacock Festival இன் புதிய இசை வெளியீட்டு கட்டமைப்பு ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது. பங்காண்மை, நிகழ்வின் பகுதியளவு உள்ளடக்கங்கள் போன்றன, சர்வதேச மற்றும் உள்நாட்டு கலைஞர்களைக் கொண்ட விசேட இசை நிகழ்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்படும். இந்நிகழ்வு ஜனவரி 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் காலியில் நடைபெறும். கோட்டையின் மூன் பஸ்டியன் மைதானத்தில் முதல் தடவையாக இசை நிகழ்வு இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும். டிசம்பர் மாதம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள 4வது வருடாந்த Electric Peacock Festival நிகழ்வுக்கு மேலதிகமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது' என லியா மரிக்கர் தெரிவித்தார். Fairway Galle Literary Festival 2016  உடன் இணைந்து இந்த அமைப்பு வெவ்வேறு இசை நிகழ்வுகளை ஐந்து நாட்களுக்கு முன்னெடுக்கவுள்ளது. 

Fairway Galle Literary Festival 2016 தொடர்பான முழு நிகழ்ச்சி நிரல் www.galleliteraryfestival.com எனும் இணையத்தளத்தில் 2015 நவம்பர் மாதம் பதிவு செய்யப்படும். இந்நிகழ்வின் தலைப்புகள் 2015 ஒக்டோபர் மாதம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுகளைப் போலவே, குயசைறயல Fairway Galle Literary Festival 2016 இன் பெருமளவான பகுதி, அருகாமையில் காணப்படும் சமூகத்தாருக்கு மீளளிக்கும் வகையில் அமைந்திருக்கும். குறிப்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயற்பாடுகள் இடம்பெறும். இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளில் மூன்று சிறுவர்களை சென்றடையும் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்காக கொண்டாட்ட நிகழ்வு, காலி தர்மபலா சிறுவர் பூங்கா பகுதியில் இடம்பெறவுள்ளது. இதில் 2500 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Galle Literary Festivalக்கு மேலாக, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிகழ்வுகளில் 250 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். மூன்று செயற்பாடுகளிலும் விசேட அம்சங்களாக சிறுவர்களுக்கிடையில் சந்திப்புகளை ஏற்படுத்துவது, சர்வதேச மற்றும் வெளிநாட்டு எழுத்தாளர்களை சந்தித்து அவர்களிடமிருந்து புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவது போன்றன உள்ளடங்கியிருக்கும். அத்துடன், 80 ஆசிரியர்களுக்கு இந்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு புத்தமைவான பயிற்றுவிப்பு ஆளுமைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும், இதனை தமது ஏனைய சக அங்கத்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ள முடியும்.

2016 கொண்டாட்ட நிகழ்வு அணியினர், மீள இணைந்துள்ள அனுசரணையாளர்களாக Land Rover, Colombo Jewellery Stores, Printcare, The Elysium Collection மற்றும் Wijeya Group ஆகியவற்றுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து இணைந்துள்ள அனுசரணையாளர்களில் ஒன்றாக Jetwing Lighthouse Hotel அமைந்துள்ளது

Jetwing Hotels இன் தலைவர் ஹிரான் குரே கருத்துத் தெரிவிக்கையில், '18 வருடங்களுக்கு முன்னதாக நாம் Jetwing Lighthouseஐ திறந்திருந்த போது, காலி நகரை நாம் மாற்றியமைத்திருந்தோம். இலங்கையின் தென் பகுதி பிராந்தியத்தை வரலாற்றுடன் இணைந்த கலாசாரத்தை உறுதி செய்திருந்தோம். Galle Literary Festival இந்த நகரில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. Jetwingஐச் சேர்ந்த நாம், இந்த நிகழ்வுடன் ஆரம்பத்திலிருந்து உத்தியோகபூர்வ விருந்தோம்பல் பங்காளராக இணைந்துள்ளதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். அடுத்த ஆண்டும் இணையவுள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.

புதிய பங்காளர்களாக இணைந்துள்ள டயலொக் மற்றும் TNL ஆகியவற்றை 2016 இன் ஏற்பாட்டுக்குழு வரவேற்பதுடன், தமது வதிவிட பங்காளர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தொடர்ச்சியான பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான இந்த நிகழ்வை பெருமளவு ஈடுபாட்டுடன் பேணும் வகையில் "Sponsor a Writer", "Donate Air Miles" போன்ற புத்தமைவான செயற்பாடுகளை இந்நிகழ்வு முன்னெடுத்து வருகிறது.  

தன்னார்வ அடிப்படையில் செயலாற்ற விரும்புவோர் அல்லது வௌ;வேறு வழிகளில் பங்களிப்பு வழங்கக்கூடியவர்கள் info@galleliteraryfestival.com எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பை ஏற்படுத்தி மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .