2021 மார்ச் 01, திங்கட்கிழமை

குறைந்த காப்புறுதித் திட்டத்தை அறிமுகப் செய்துள்ள கொமர்ஷல் வங்கி

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுண் கடன் பெறுவோரை பாதுகாக்கும் வகையிலான புதிய செலவு குறைந்த காப்புறுதித் திட்டம் ஒன்றை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. செலிங்கோ காப்புறுதி மற்றும் BIMA என்பனவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

விபத்து மூலமான மரணம் அல்லது நிரந்தர அங்கவீனம், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவதால் வருமான இழப்பு, மற்றும் மரணச் செலவு என்பனவற்றுக்குரிய காப்புறுதிகளை வழங்கும் வகையில் இந்தப் புதிய திட்டம் அமைந்துள்ளது.

மாதாந்த சந்தாவாக 150ரூபா, 300ரூபா மற்றும் 600ரூபாவை செலுத்தி முறையே வெள்ளி தங்கம் மற்றும் பிளேடினம் வகை காப்புறுதிகளைப் பெற்று இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். இவற்றுக்கான காப்புறுதித் தொகை முறையே 1மில்லியன், 2மில்லியன் மற்றும் 4மில்லியன் ரூபாய்களாக இருக்கும். ஆயுள் காப்பாக முறையே 50ஆயிரம், ஒரு லட்சம் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா அமைந்திருக்கும் என்றும் வங்கி அறிவித்துள்ளது.

'நுண் தொழில்முயற்சிப் பிரிவில் உள்ள எமது வாடிக்கையாளர்களை பாதுகாப்பதிலும் அவர்களது நலன்களிலும் நாம் எந்தளவு அர்ப்பணத்துடன் பணியாற்றுகின்றோம் என்பதற்கு  மற்றுமோர் உதாரணமாகும்' என்று கூறினார் கொமர்ஷல் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் (தனியார் வங்கி பிரிவு) சந்தன குணசேகர. 'இன்று நுண் கடன் பெறுபவர்கள் இன்னும் சில வருடங்களில் சரியான ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் சிறிய அல்லது நடுத்தர தொழில் முயற்சியாளர்களாக வளரலாம். கொமர்ஷல் வங்கி அந்த ஆதரவை வழங்க திடசங்கற்பம் பூண்டுள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.

காப்புறுதிகளை செலிங்கோ காப்புறுதி நிறுவனம் வழங்கும். மெல்விக் லங்கா (BIMA என அழைக்கப்படும்) நிறுவனம் விற்பனை பிரிவை கையாளும். இந்த நிறுவனம் நடமாடும் காப்புறுதிகளை வழங்கும் ஒன்றாகும். தொழில்நுட்ப அமுலாக்கம் மற்றும் உரிமை கோரல் நிர்வாகம் என்பனவற்றையும் இந்த நிறுவனமே கையாளும். இந்த காப்புறுதிக்கான அதிகரிக்கும் தேவையை அடிப்படையாகக் கொண்டு தேவைப்படும் இடங்களில் இதன் அதிகாரிகள் வங்கிக் கிளையில் நிலை நிறுத்தப்படுவர் என்றும் வங்கி அறிவித்துள்ளது.

இந்த காப்புறுதியை பெற்றுக் கொள்ளும் ஒருவர் விபத்தில் சிக்கியோ அல்லது நோய்வாய்ப்பட்டோ ஆஸ்பத்திரியில் இருந்து தங்கியிருந்து சிகிச்சைப் பெறுகின்ற போது நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா முதல் மூவாயிரம் ரூபா வரை செலவுக்காக வழங்கப்படும். ஆகக் கூடிய பட்சம் இருபது தினங்களுக்கு வழங்கப்படும்.

காப்புறுதியைப் பெறும் ஒருவர் விபத்தின் மூலம் மரணிக்க நேர்ந்தால் மரண செலவுக்காக 25ஆயிரம் ரூபா முதல் ஒரு லட்சம் ரூபா வரை வழங்கப்படும். மேலும் அவருடைய காப்புறுதியில் எஞ்சியுள்ள பணத்தைக் கொண்டு கடன் மீதியும் அறவிடப்படும்.

கொமர்ஷல் வங்கியில் நுண் சேமிப்பு அல்லது கடன் பெறும் நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியின் பேங்கா எசூரன்ஸ் திட்டத்தின் மூலம் இவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். இந்த சேவைகளின் ஒரு விரிவாக்கமாகே புதிய அறிமுகம் அமைந்துள்ளது

கொமர்ஷல் வங்கி  நாடு முழுவதும் 243 கிளைகளுடனும், 613 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. இதுவே நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியாகும். 2014ம் ஆண்டில் மிகச் சிறந்த தனியார் வர்த்தக முத்திரையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2015ல் பினான்ஸ் ஆசியாவால் இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கி ஏனைய பல சர்வதேச சஞ்சிகைகள் மூலமாகவும் கடந்த பல ஆண்டுகளில் இலங்கையின் தலைசிறந்த வங்கி என தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில்; இலங்கையின் மிகச் சிறந்த பத்து கூட்டாண்மை பிரஜைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த பத்தாண்டுகளாக இலங்கையின் மிகவும் கௌரவத்துக்குரிய வங்கியாக LMD தர வரிசையில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. அத்தோடு கடந்த நான்கு வருடங்களாக இதே தர வரிசையில் இலங்கையின் ஒட்டு மொத்த கூட்டாண்மை நிறுவனங்களுள் மிகவும் கௌரவத்துக்குரிய இரண்டாவது நிறுவனம் என்ற இடத்தையும் தக்கவைத்துள்ளது. 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இதே LMD சஞ்சிகையின் தரவரிசையில் மிகவும் நேர்மையான நிறுவனங்களுள் முதலாவது இடத்தையும் தன்னகத்தே தக்கவைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .