A.P.Mathan / 2015 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) நிறுவனம் அண்மையில் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் (SLIM) ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய விற்பனை மாநாடு 2015 விருதுகள் (NASCO), வழங்கும் நிகழ்வில் மூன்று முக்கிய விருதுகளை வென்று விற்பனை தலைமைத்துவத்தில் அதன் ஆதிக்கத்தையும், செயற்திறனையும் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.
நாடுமுழுவதும் உள்ள நிறுவனங்களைச் சேர்ந்த விற்பனை பிரதிநிதிகளின் செயற்திறனை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் முன்னணி தேசிய நிகழ்வாக SLIM விற்பனை மாநாடு அமைந்துள்ளது. NASCO 2015 நிகழ்வில் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பெரும்பாலோனோர் பங்குபற்றியிருந்தனர்.
இந்த ஆண்டில் வென்ற விருதுகள் CBL நிறுவனத்தின் தொழிற்துறையில் அதன் முக்கிய பங்கு மற்றும் சந்தைப்படுத்தலில் அதன் செயற்திறன் போன்றவற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன. 'C range' முன்னணி வரிசையாளர் பிரிவில் தங்க விருதை நிலந்த மென்டிஸ் உம், 'B range' இல் பிரதேச முகாமைத்துவ பிரிவில் வெள்ளி விருதை விற்பனை பிரதிநிதி மஞ்சுள விஜேரத்ன உம், விற்பனை மேற்பார்வையாளர் பிரிவில் வெண்கல விருதை நந்தன பெர்னாண்டோவும் வென்றனர். CBL இன் விற்பனை படையினர் மூன்று தொகுதிகளுள்; கட்டமைக்கப்பட்டுள்ளனர். மஞ்சி பிஸ்கட்ஸ் 'B' பிரிவிலும், லங்காசோய் மற்றும் சமபோஷ ஆகியன 'C' பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டிருந்தன.
'எமது வெற்றியாளர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். ஒவ்வொரு வெற்றியாளரும் தமது விற்பனை தலைமைத்துவத்திலும், நிறுவனத்தினுள் திறமைகளை வெளிப்படுத்துவதிலும் முன்னுதாரணமாக திகழ்ந்தனர்' என CBL நிறுவனத்தின் பணிப்பாளரும், குழு பொது முகாமையாளருமான ஐ.எம்.கான் தெரிவித்தார். 'CBL நிறுவனம் மீண்டும் ஒருமுறை அதன் சக்திமிக்க விற்பனை படையினர் ஊடாக சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையில் தாம் வழங்கும் தரமான சேவை ஊடாக மட்டுமன்றி, வர்த்தகத்தின் அனைத்து அம்சங்களிலும் சந்தை முன்னோடியாக தமது நிலையான ஆதிக்கத்தை நிரூபனம் செய்துள்ளது' என மேலும் அவர் தெரிவித்தார்.
SLIM NASCO வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு என்பது விற்பனை பிரதிநிதிகளை கௌரவித்து அவர்களை ஊக்குவிக்கும் ஓர் களமாக இருந்து வருகிறது. இதில் பிரதேச முகாமைத்துவம், விற்பனை நிறைவேற்றுநர் மற்றும் முன்னணி வரிசையாளர் போன்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் போன்ற விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.
5 minute ago
5 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
5 minute ago
20 minute ago
32 minute ago