2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பல விருதுகளை தமதாக்கிய JAT ஹோல்டிங்ஸ்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLIM NASCO விருதுகள் 2015 இல், இரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல விருதை JAT ஹோல்டிங்ஸ் தனதாக்கியிருந்தது.

சிறந்த பிராந்திய முகாமையாளர் (தொழிற்துறை பிரிவு) தங்க விருதை JAT ஹோல்டிங்ஸ் முகாமையாளர் தேவிகா கால்லகே வென்றிருந்தார். சிறந்த முன்னிலையாளருக்கான (தொழிற்துறை பிரிவு) தங்க விருதை நிஷாந்த பிரியதர்ஷன வென்றார்.

இதேவேளை, இதே பிரிவில், சிறந்த முன்னிலையாளருக்கான வெள்ளி விருது ரங்கன பெர்னான்டோவுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், வெண்கல விருது சஞ்ஜய ஜயவீரவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய விற்பனை காங்கிரஸ் (NASCO) விருது, இலங்கையில் விற்பனைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், இந்தத் துறையைச் சேர்ந்தவர்களை தேசிய மட்டத்தில் கௌரவிக்கும் ஒரே விருதுகள் வழங்கும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது. 

இலங்கைச் சந்தையை மேம்படுத்தும் வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் JAT ஹோல்டிங்ஸ், கடந்த 10 வருட காலத்தில் சர்வதேச மட்டத்தில் தமது வியாபார செயற்பாடுகளை விஸ்தரித்திருந்தமைக்காக ஃபிரான்ட்ஸ் ஃபினான்ஸ் லங்கா அமைப்பின் மூலமாக 'உறுதியான பன்முகப்படுத்தப்பட்ட வர்த்தகநாமம்' எனும் அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் தனது வர்த்தக பிரசன்னத்தை JAT ஹோல்டிங்ஸ் கொண்டுள்ளது. இந்த வெளிநாட்டுச் சந்தைகளில் வளர்ச்சி என்பது மிகவும் சவாலான விடயமாக அமைந்திருந்த போதிலும், JAT ஹோல்டிங்ஸ் செயலணி தமது அயராத அர்ப்பணிப்புடனான செயற்பாட்டின் மூலமாக சவால்களை வென்று, தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

JAT வர்த்தக நாமத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்கு மேலதிக திட்டங்கள் காணப்படும் நிலையில், வெளிநாடுகளில் தனது பிரசன்னத்தை மேலும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. கம்பனியின் பெருமளவான வாடிக்கையாளர்கள் தமது நன்றிகளையும், பாராட்டுகளையும் JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளதுடன், சிறந்த தளபாட மற்றும் முடிவு தெரிவை எய்தியிருந்தமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

JAT ஹோல்டிங்ஸ், புகழ்பெற்ற தனது தெரிவுகளில், இத்தாலியின் SAYERLACK மரப்பூச்சு வகைகள், அமெரிக்காவின் ஹேர்மன் மில்லர் அலுவலக தீர்வுகள், பிரித்தானியாவின் க்ரவுண் மற்றும் பேர்மோகிளேஸ் அலங்கார உள்ளக மற்றும் வெளிப்புற சுவர் பூச்சுகள், இத்தாலியின் Borma Wachs பராமரிப்பு தீர்வுகள் பிரான்ஸ் நாட்டின் Norton Abrasives (Saint Gobain) மற்றும் பிரஷ் வகைகள் போன்றன உள்ளடங்கியுள்ளன. குழுநிலைச் செயற்பாடு மற்றும் கூட்டாண்மை குடியுரிமை ஆகியவற்றில் கம்பனி அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளது. இதற்கமைய தனது அர்ப்பணிப்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், தனது தொழில்நுட்பவியலாளர்களுக்கு சர்வதேச பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கான முதலீடுகளையும் மேற்கொண்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .