2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

ஹட்டன் நஷனல் வங்கியின் 211ஆவது கிளை உப்புவெளியில்

A.P.Mathan   / 2011 ஜூன் 23 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

ஹட்டன் நஷனல் வங்கி தனது 211ஆவது வாடிக்கையாளர் சேவை நிலையத்தை இன்று வியாழக்கிழமை காலை திருகோணமலை நகரின் புறநகர்ப்பகுதியான உப்புவெளியில் திறந்து வைத்தது, கிழக்கு மாகாணத்தில் இது 18ஆவது வாடிக்கையாளர் சேவை நிலையமாகும்.

பத்து மீன்பிடிக் கிராமங்களின் மத்தியில் இவ்வாடிக்கையாளர் சேவை நிலையம் அமைந்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் பொருளாதார ஸ்திரத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கி வரும் மீன்பிடி சமூகத்திற்கு நன்றிக்கடன் செலுத்தும் ஒரு நடவடிக்கையாகவே உப்புவெளியில் தனது கிளை ஒன்றை திறப்பதற்கு ஹட்டன் நஷனல் வங்கி முன்வந்துள்ளது என்று, நிகழ்வில் முதன்மை அதிதியாக பங்குபற்றி கிளையை திறந்து வைத்த -வங்கியின் கிழக்கு பிராந்தியத்திற்கான சிரேஷ;ட முகாமையாளர் ஏ.வி.பீடில் தெரிவித்தார்.

இவ்வங்கியினால் அப்பகுதி மீனவர்களுக்கு கடன் வசதிகள் இன்று வழங்கப்பட்டன. வங்கியின் திருகோணமலை பிரதான கிளையின் முகாமையாளர் எஸ்.சுந்தரேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். வங்கிக்கிளையின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி வத்ஸலா சுதர்சன் நன்றி தெரிவித்தார்.

சிரேஷ்ட முகாமையாளர் பீடில் பேசுவதையும் வாடிக்கையாளரிடமிருந்து முதலாவது பண வைப்பைப் பெற்றுக்கொள்வதையும் மீனவருக்கு கடன் அடிப்படையில் வசதிகளை வழங்குவதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X