2025 ஜூலை 07, திங்கட்கிழமை

2.5 மில்லியன் முஸ்லிம்கள் 'பேஸ்புக்' பாவனையை விட்டு விலகுவதாக எச்சரிக்கை

A.P.Mathan   / 2010 ஜூலை 16 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகற்றப்பட்ட 4 இஸ்லாமிய பக்கங்களை மீண்டும் கொண்டுவரப்படாதவிடத்து 2.5 மில்லியன் முஸ்லிம்கள் 'பேஸ்புக்'கிலிருந்து விலகிவிடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல 'பேஸ்புக்' பக்கங்களில் ஒரே மாதிரியான விளம்பரங்களை இவர்கள் விடுத்திருக்கிறார்கள். அவ்விளம்பரத்தில், 'பேஸ்புக்' நிறுவுனரான மார்க் ஸக்கர்பேக் மற்றும் 'பேஸ்புக்'கின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் ஆகியோர், 2.5 மில்லியன் முஸ்லிம்களின் உணர்வை உதாசீனம் செய்வதாக குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.

மிகப் பிரபலமான இஸ்லாமிய பக்கங்கள் நான்கு அகற்றப்பட்டதையிட்டு இஸ்லாமிய சமுதாயம் கோபமாக உள்ளது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாதவிடத்து பேஸ்புக்கினை பயன்படுத்தும் முஸ்லிம்கள், இஸ்லாமிய மாற்று வலையமைப்புகளுக்கு மாறிவிடுவர் எனவும் அவர்கள் மேலும் எச்சரிக்கின்றனர்.

இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களை 'பேஸ்புக்'கில் பதிவிடுவது 'பேஸ்புக்' சட்டங்களுக்கு எதிரானது என விதிக்க வேண்டும் என்பதும் இக்கடிதத்தில் உள்ள இன்னொரு கோரிக்கையாகும்.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Saturday, 17 July 2010 08:08 PM

    நல்ல வேளை நான் இதில் சேரவில்லை. சேர முயற்சித்த போதும் கைகூடவில்லை! மத மாச்சரியங்கள் உலகில் முடிவுக்கு வர ஒருவர் இன்னொரு மதத்தவரது கொள்கை கலாச்சாரங்களை மதிக்க பழகவேண்டும். குறைந்த பட்சம் அவர்களுடைய விருப்பு வெறுப்புகளையாவது அறிந்து கொண்டு செயல்படவேண்டும். "இது தான் ஊடக சுதந்திரம். இது தான், இப்படி தான் நாங்கள் உங்களை கேலி செய்வோம்" என்று கூறிக்கொண்டு இருக்கக்கூடாது. முகமது நபியின் படம் வரைவதில்லை என்றால் ஏன் இவர்கள் கேட்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பிடிவாதம் எங்கு போய் நிற்குமோ?

    Reply : 0       0

    Abdul Saturday, 17 July 2010 09:45 PM

    நான் மே மாதம் என்னுடைய கணக்கை முறித்துவிட்டேன் என்பதில் எனக்கு சந்தோசம். ஆனால் இன்னும் முஸ்லிம்கள் இந்த இணைய தளத்தை பாவித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது மிகவும் வருந்த தக்கது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .