2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

250 அத்தியாயங்களை எட்டிய 'றிட்ஸ்பரி ஜேர்னி டே' தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

Super User   / 2010 நவம்பர் 10 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை கல்வி சுற்றுலா நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்து, இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் வதியும் மாணவர்களுக்கும் கண்டுகளிக்கக் கூடிய வகையில், சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாகும் 'றிட்ஸ்பரி ஜேர்னி டே' தனது 250 அத்தியாயத்தை அண்மையில் பூர்த்தி செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு கல்வி சுற்றுலாவின் மூலம் மாணவன் ஒருவனுக்கு கிடைக்கும் அனுபவம் பற்றியும் சுற்றுலாவுக்காக ஒரு புதிய பகுதியை தெரிவு செய்து அந்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து ஒளிப்பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதன் மூலம், நேரடியாகவே அந்த அனுபவத்தை பெற்றுக் கொண்டது போன்ற வாய்ப்பும் கிடைக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் முன்னணி வர்த்தக நாமமான
றிட்ஸ்பரி பூரண அனுசரணை வழங்கியிருந்தது. தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பாகும் சிறுவர் விவரண நிகழ்ச்சிகளில் தமக்கென ஒரு தனி நாமம் படைத்த
றிட்ஸ்பரி ஜேர்னி டே நிகழ்ச்சி மூலம், இயற்கை வனப்பு மிகுந்த பிரதேசங்கள், வனப்பிரதேசங்கள், வரலாற்று சிறப்பு மிக்க நகரங்கள் மற்றும் பகுதிகள், பாரம்பரிய
கிராமங்கள் போன்ற இலங்கை தொடர்பாக ஒரு மாணவன் தெரிந்து கொள்ள
வேண்டிய அனைத்து விடயங்களும் காண்பிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு புதன் கிழமையும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி
மீள்ஒளிபரப்பாக சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மீண்டும் ஒளிப்பரப்பாகிறது.

பாடசாலை மாணவ குழாம் ஒன்று கல்விச் சுற்றுலாவை மேற்கொள்கிறது எனும்
வகையில் தயாரிக்கப்படும் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிய
மாணவ மாணவியர் சேர்த்துக்கொள்ளப்படுகின்றமை விசேட அம்சமாகும். நிகழ்ச்சி
ஆரம்பமாவதற்கு முன்னர், தாம் செல்லும் பகுதி தொடர்பான விசேட அறிவித்தல்
ஒன்றை வழங்கி பின்னர் நிகழ்ச்சியின் இடையிடையே ஒவ்வொரு பகுதியினதும்
சிறப்பம்சங்கள் வெளிக்கொணரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி குறித்து றிட்ஸ்பரி வர்த்தக நாமத்தின் சிரேஷ்ட விற்பனை
முகாமையாளர் நிலுபுல் த சில்வா கருத்து தெரிவிக்கையில், 'கடந்த 5 ஆண்டு
காலமாக இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக நாம்
இது வரை செலவிட்டுள்ள தொகை 7 கோடி ரூபாய்களை விட அதிகமாகும்.


மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக நாம் கருதியே இந்த
நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறோம். உயர் தரத்திலும், சுவையில் நிறைந்த
றிட்ஸ்பரி சொக்லேட் தயாரிப்பில் கூடிய அக்கறை செலுத்தும் நாம், மாணவர்களின்
கல்வி தரத்தை முன்னேற்றுவதிலும், அவர்களுக்கு களிப்பையும் கல்விசார்
அறிவையும் வழங்கக்கூடிய நிகழ்ச்சியை இலாப நோக்கமின்றி செயற்படுத்துகிறது'
என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--