2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

எடிசலாட்டிற்கு 3 மில்லியன் வாடிக்கையாளர்கள்

Super User   / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கி வரும் எடிசலாட் நிறுவனம், 3 மில்லியன் வாடிக்கையாளர்களை பதிவு செய்துள்ளது.

அண்மையில் நிறுவனம் மேற்கொண்டிருந்த வலையமைப்பு விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் மூலம் இலங்கையின் முன்னணி 2G வலையமைப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்கிறது. பின்தங்கிய பகுதிகள் உள்ளடங்கலாகவும் வடக்கு கிழக்கு பகுதிகள் உள்ளடங்கலாகவும் ஸ்திரமான வலையமைப்பு சேவைகளை எடிசலாட் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

எடிசலாட் இலங்கையில் அறிமுகமானதிலிருந்து 24 சதவீத வாடிக்கையாளர் வளர்ச்சியை எய்தியுள்ளது. அத்துடன் சந்தை பிரதிபலிப்பும் அதிகரித்துள்ளதன் மூலம், இலங்கையில் தொலைபேசி சேவைகளை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத்  திகழ்கிறது.

வடக்கு கிழக்கிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு அதியுன்னத வலையமைப்பும், அதியுயர் சேவையையும் வழங்கும் நோக்கை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் எடிசலாட் நிறுவனம், இலங்கையில் அதியுயர் திறன் வாய்ந்த 3பு வலையமைப்பை அறிமுகம் செய்யவுள்ளது.

மூன்று மில்லியன் வாடிக்கையாளர்கள் எனும் இலக்கை எய்தியமை குறித்து எடிசலாட் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரி கருத்து தெரிவிக்கையில்  'தொடர்ந்தும் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளையும், விற்பனை சலுகைகளையும்,
கவர்ச்சிகரமான கட்டணப்பொதிகளையும் இதர சேவைகளையும், எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதன் மூலம் வாடிக்கையாளர் சேவை, புதிய அறிமுகங்கள், சிறந்த தரம் போன்ற துறைகளில் நாம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

மூன்று மில்லியன் வாடிக்கையாளர்கள் என்பது எடிசலாட் நிறுவனத்துக்கு பெரும் மைல் கல்லாக அமைந்துள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதன் மூலம் நிறுவனத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல நாம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளோம், அத்துடன் எமது சாதனைக்கு பக்க பலமாக விளங்கிய எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் தொடர்ந்தும் தரமான சேவைகளை வழங்க கடமைப்பட்டுள்ளோம்' என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--