2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

ஏயிற்கின் ஸ்பென்ஸ் மற்றும் 'ரீஎன்ரீ' எக்ஸ்பிரஸ் – 30ஆவது ஆண்டு நிறைவு

A.P.Mathan   / 2011 ஜூன் 22 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எயிற்கின் ஸ்பென்ஸ் குழுமம், உலகின் நான்கு முன்னணி விரைவுப் பொதிகள் பொதிகள் சேவைகள் நிறுவனமுமான 'ரீஎன்ரீ' எக்ஸ்பிரசுடனான தமது 30 ஆண்டுகால கூட்டாண்மையை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. தமது சொந்த விமானங்களைப் பயன்படுத்தி உலகிலுள்ள 200இற்கும் அதிகமான நாடுகளில் பொதிகள் சேவையை மேற்கொள்ளும் ஓர் உலகளாவிய நிறுவனமான TNT Express, எயிற்கின் ஸ்பென்ஸ் கார்கோ (Aitken Spence Cargo) நிறுவனத்தின் துரித பொதிகள் சேவையான ஏஸ் இன்டர்நஷனல் எக்ஸ்பிரஸ் (Ace International Express) நிறுவனத்தினால் தொடர்ச்சியாகக் கையாளப்படுகிறது.

1981ஆம் ஆண்டில், அப்போது (Ace Cargo) ஏஸ் கார்கோ என அழைக்கப்பட்ட எயிற்கின் ஸ்பென்ஸ் கார்கோ நிறுவனத்தினால், அதன் மற்றொரு கிளையாக 3 பேருடன் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட TNT, இன்று நாடளாவிய ரீதியில் 14 கிளை அலுவலகங்கள், 12 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள், 2 பண்டகசாலைகள் என்பவற்றுடன் தனிப் பெரும் நிறுவனமாக விளங்குகிறது. யாழ்ப்பாணத்தில் தனது கிளையினை ஆரம்பித்த முதலாவது விரைவுப் பொதிச் சேவை TNT என்பதுடன் நாட்டில் யுத்தச் சூழ்நிலை இருந்தபோதும் வடக்கில் சேவையாற்றிய ஒரேயொரு விரைவுப் பொதிச் சேவையும் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கிளை வலையமைப்பைத் தவிர இலங்கையில் 49 வாகனங்களையும் 165 பணியாளர்களையும் கொண்டு TNT இயங்குகிறது. 

இலங்கையில் சரக்குப் பரிமாற்றச் சேவையில் முதன்மையான நிறுவனமாக Aitken Spence Cargo (எய்ற்கின் ஸ்பென்ஸ் கார்கோ) எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று TNT எக்ஸ்பிரஸ் வளர்ச்சியடைந்து இலங்கையின் விரைவுப் பொதிச் சேவையில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. TNT நிறுவனம் இன்று சர்வதேச ரீதியில் விமான விரைவுச் சேவைகளையும், உள்ளூர் விரைவுச் சேவைகளையும், விநியோக வலையமைப்பு, விநியோகம் பண்டகசாலையிடல் மற்றும் சர்வதேச தபால் கையாளுகை என்பவற்றை மேற்கொள்ளும் விதத்தில் விரிவடைந்துள்ளது. அத்துடன் 1997ஆம் ஆண்டில் ISO தரச் சான்றிதழைப் பெற்றதன் மூலம் இலங்கையில் விமான விரைவுப் பொதிச் சேவைகளைக் கையாளும் நிறுவனங்களுள் இச் சான்றிதழைப் பெற்ற முதலாவது நிறுவனம் இதுவேயென்ற பெருமையையும் அடைந்துள்ளது. தெற்காசியாவில் இச்சான்றிதழைப் பெற்ற இரண்டாவது நிறுவனம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

TNT Express மற்றும் Aitken Spence Cargo நிறுவனங்களுக்கிடையிலான நல்லுறவு கடந்த 3 தசாப்தங்களுக்கும் மேலாக வெளித்தன்மை, நேர்மை, உறுதியான ஈடுபாடு என்பவற்றின் அத்திவாரத்தின் அடிப்படையில் வளர்ச்சியடைந்து சேவைத் தரத்தை எட்டியுள்ளது. TNT Express சேவையைத் தமது சிறகின்கீழ் கொண்டுள்ள, Aitken Spence நிறுவனம் இன்று தமது வாடிக்கையாளருக்குப் பொருள்களை விரைவாக அனுப்புதல் தொடர்பான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

TNT Express (Sri Lanka & Maldives) நிறுவனத்தின் தேச முகமையாளர் ஜெரோம் புரோஹியர் இலங்கையில் TNT Express நிறுவனத்தின் வெற்றி குறித்துக் கருத்து வெளியிடுகையில்... 'சரக்குகளை ஏற்றுதல், ஏற்றுமதி - இறக்குமதி, ஆடைகளைக் கொழுவிகளில் அனுப்புதல், பழுதடையக்கூடிய பொருள்கள், ஆபத்தான பொருள்கள், முகவரியிலிருந்து முகவரிக்கான விரைவு விநியோக சேவை (door-to-door express deliveries) கடல், ஆகாய மற்றும் ஆகாய விமான விநியோக சேவை எனப் பல்வேறு வகையான விரைவு விநியோகச் சேவைகளைக் கையாள்கிறது.

'நவீன தொழில்நுட்பம், இணையற்ற வாடிக்கையாளர் சேவை, சாதகமான கட்டண முறை என்பவற்றில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். TNT யின் நம்பிக்கை வீச்செல்லை என்பவற்றின் அடிப்படையிலான சர்வதேசப் பலத்தைத் தவிர Aitken Spence Cargo நிறுவனத்தின் உள்ளூர் பிரசன்னம் மற்றும் ஸ்திரத் தன்மை காரணமாக வாடிக்கையாளர்கள் தமது விரைவுப் பொதிப் பரிமாற்றச் சேவைகளுக்காக எம்மில் தங்கியுள்ளனர்' என்றார் ஜெரோம்.

TNT வலையமைப்பினூடாக உள்ளூர் விரைவு விநியோகச் சேவைகளையும் வழங்கிவருகிறது. TNT நிறுவனத்தின் உள்ளூர் பிரிவான Ace Express உள்ளூர் விரைவு விநியோகத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வருவதன்மூலம் நாட்டிலுள்ள விரிவான உள்ளூர் விரைவு விநியோகச் சேவையென்ற பெயரைப் பெற்றுள்ளது.

Aitken Spence குழுமத்தின் பணிப்பாளர்களில் ஒருவரும் Ace International Express நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான றொஹாந்த பீரிஸ் கருத்து வெளியிடுகையில்... 'TNT நிறுவனம் இன்று போட்டிபோடமுடியா அளவிலான சர்வதேச மற்றும் உள்ளூர் விரைவுச் சேவைகளுடன் இலங்கையின் முன்னணி விரைவு விநியோகச் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. Aitken Spence Cargo நிறுவனத்தின் குடையின்கீழ் இருப்பதனால் பங்களாதேஷ், மாலைதீவு, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுக்கான எமது பிராந்திய விரிவாக்கம், போட்டித்தன்மையான வாய்ப்பை எமக்கு வழங்குகிறது. எனவே TNT வாடிக்கையாளர்கள் பொருட்களை விரைவாக அனுப்பும் சேவைகளை தமக்கென வடிவமைக்கப்பட்ட முறைகளில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது...' எனத் தெரிவித்தார்.

'தனியார் மற்றும் அரச துறையினர் ஒன்றாக இணைந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இது அவசியமாகிறது என்பதுடன் Aitken Spence குழுமம் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கேற்க முழுமையாகத் தன்னைத் தயார்ப்படுத்தியுள்ளது' என றொஹாந்த பீரிஸ் தெரிவித்தார்.

TNT Express நிலைநிறுத்தத்தக்க எதிர்காலத்தை உருவாக்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்திவருகிறது. Planet Me மற்றும் Code Orange என்ற தமது செயற்றிட்டங்களின்கீழ் உலகெங்கும் காபனீரொட்சைட் வெளிவிடப்படுவதைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும் TNT தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த முழுமையான சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ், நிறுவனத்தின் சர்வதேச நடவடிக்கைகளில் காபனின் செயற்றிறனை அதிகரிக்கச் செய்வதுடன், அதன் ஊழியர்களையும் இந்த விரிவாக்க வலையமைப்பின் செயற்பாடுகளில் ஈடுபடுத்திவருகிறது.

தமது ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என்பவர்களுடன் பணியாற்றும்போது, நிறுவனத்தின் கூட்டுப் பொறுப்பான வினைத்திறன் நடவடிக்கைகள், சுகாதாரம், பாதுகாப்பு, ஊழியர் மேம்பாடு, இயற்கை வளப் பயன்பாடு, காபன் அடிச்சுவட்டுச் செயற்பாடுகள் என்பவை தொடர்பாக அமைந்துள்ளதுடன் சமூகப்பணி நடவடிக்கைகளிலும் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. சமூகப் பணிகளெனக் குறிப்பிடும்போது இலங்கையில் 30 ஆண்டுகாலச் சேவையை முன்னிட்டு சக்கரங்கள் பொருத்திய 30 படுக்கைகளை தேசிய வைத்தியசாலைக்கு TNT நிறுவனம் வழங்கியுள்ளது.

2002ஆம் ஆண்டிலிருந்து TNT நிறுவனம் தனது ஆளணி, அறிவு, வளம் என்பவற்றை உலகின் பாரிய மனிதாபிமான உதவி நிறுவனமான உலக உணவுத் திட்டத்திற்கு வழங்கிவருகிறது. உலகில் புகையை வெளியேற்றாத முதலாவது நிறுவனம் என்ற பெயரைப் பெறவேண்டுமென்பதே TNT நிறுவனத்தின் குறிக்கோளாகும். அத்துடன் தமது நடவடிக்கைகளின்போது காபனை வெளியேற்றாத நிறுவனம் என்ற இலக்கை அடைவதும் அதன் நோக்கமாகும்.

TNT Express 200இற்கும் அதிகமான நாடுகளில் பொதிகள், ஆவணங்கள், சரக்குத் தொகுதிகளென வாராந்தம் 4.7 மில்லியன் தொகுதிகளை விநியோகிக்கும் ஒரு சர்வதேசப் போக்குவரத்து விநியோக நிறுவனமாகும். TNT Express ஆகாயம் மற்றும் தரை மார்க்கமாக ஐரோப்பா, சீனா, தென்னமெரிக்கா, ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைகளை நடத்தும் பொதிப் போக்குவரத்து நிறுவனமாகும். 83,000 ஊழியர்களையும் 30,000 வீதிப்போக்குவரத்து வாகனங்களையும் 50 விமானங்களையும் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் 2,600இற்கும் அதிகமான சேமிப்புக் கிடங்குகளையும், வகைப்படுத்தும் நிலையங்களையும் கொண்டுள்ளது. TNT Express நிறுவனம் 2010ஆம் ஆண்டில் 7.053 பில்லியன் யூரோக்களை வருமானமாகப் பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .