2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை பல்மருத்துவ துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள 3M ESPE புதிய கண்டுபிடிப்புகள்

A.P.Mathan   / 2013 ஜூலை 29 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் பல்மருத்துவ துறைக்கு அவசியமான புதுமையான தீர்வுகளை வழங்கும்; முன்னணி நிறுவனமான 3M ESPE ஆனது அண்மையில் FDI/CDA/SLDA உடன் இணைந்து நடாத்திய சர்வதேச பல்மருத்துவ மாநாட்டில் புதிய பல்மருத்துவ தீர்வுகளை அறிமுகம் செய்து வைத்தது.
 
SLDAஇன் 80ஆவது வருடாந்த கூட்டத்தொடர் மற்றும் சர்வதேச பல்மருத்துவ மாநாட்டிற்காக இலங்கை பல்மருத்துவ சங்கத்துடன் 3M ESPE இணைந்து நடாத்திய இந் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. இந் நிகழ்வினை சர்வதேச பல்மருத்துவ கூட்டமைப்பு (FDI) மற்றும் பொதுநலவாய பல்மருத்துவ சங்கம் (CDA) ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை பல்மருத்துவ சங்கம் (SLDA) ஏற்பாடு செய்திருந்தது. 'பல் மற்றும் வாய்ச்சுகாதார பராமரிப்பு குறித்த புதிய சவால்கள்' எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இம் மாநாடு தேசிய மற்றும் வெளிநாட்டு துறைசார் நிபுணர்களை ஒன்றிணைத்திருந்ததுடன், Dental Implantology, Fixed Prosthesis, Aesthetic Dentistry, Endodontics, பற்சீரமைப்பு (Orthodontics), Ceramics நவீன Periodontology, வாய் நோய்கள் மற்றும் சிறியளவிலான வாய் அறுவை சிகிச்சைகள் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
 
3M ESPE காட்சிக்கூடத்தின் மூலம் மாநாட்டில் பங்கேற்ற 800 க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களுக்கு உற்பத்தி தீர்வுகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் இலங்கை வாய் பராமரிப்பு துறைக்கு நெகிழ்வானதும், சுய ஆதரவுடன் இயங்கக்கூடியதும், கதிரியக்கத்தின் மூலம் குணப்படுத்தக் கூடியதும், inomer மற்றும் Protemp IV நானோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட Ketac N100 தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. உற்பத்தி தீர்வுகள் குறித்த விளக்க செயல்முறைகள் மற்றும் 3M ESPE புதிய கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதற்கான வாய்;ப்பு போன்றவற்றின் காரணமாக இக் காட்சிக்கூடம் பல பல்மருத்துவ நிபுணர்களை கவர்ந்திருந்தது. இதன் ஊடாக Anaheim Group இன் மூலம் தொடர்ச்சியாக 8வது தடவையாக 'உலகளாவிய சிறந்த புத்தாக்க பல்மருத்துவ நிறுவனம்' என அடையாளப்படுத்தியதன் காரணத்தை தெளிவுபடுத்துவதே எமது குறிக்கோளாக அமைந்தது.
 
மேலும் வெளிநாடுகளிலிருந்து வரைவழைக்கப்பட்ட 3M பல்மருத்துவ நிபுணர்கள் மூலம் பல்மருத்துவர்கள் மத்தியில் 3M வாய்ச்சுகாதார தயாரிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் நேருக்கு நேர் உரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கருத்தரங்கில் தேசிய பல்மருத்துவ நிபுணர் டாக்டர்.அரவிந்த் ஷெனோய் கருத்து தெரிவிக்கையில், 'பல்மருத்துவ துறையில் ஆறு மாதத்திற்கு ஒருதடவை புதிய தயாரிப்புகளும் தீர்வுகளும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் பல்மருத்துவ துறையின் தரம் உயர்வாகும். தெற்காசிய நாடுகளுக்கு எதிராக இலங்கையிலுள்ள 20 மில்லியன் சனத்தொகைக்கு 2000 பல்மருத்துவர்கள் உள்ளமை பெரும் சாதனையாகும்' என்றார்.
 
3M ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சுகாதார பராமரிப்பு பிரிவின் பிராந்திய முகாமையாளர் சன்ஜய் ரெகாவா கருத்து தெரிவிக்கையில், '3M ESPE ஆனது தொடர்ச்சியாக பல் நோயாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் உள்நாட்டு பல்மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கேற்ப வௌ;வாறான பூகோள சந்தை நிலைமைகள் படி எளிதான, சிறந்த தொழில்நுட்பத்தில் அமைந்த தயாரிப்புகளை அபிவிருத்தி செய்து வருகிறது. ஆகவே, எமது அனைத்து தயாரிப்புகளும் பல் மருத்துவர்களுக்கு அறிமுகப்படுத்த முன்னர் விரிவாக பரிசோதிக்கப்படுகின்றன' என்றார். மேலும் அவர் உள்நாட்டு சந்தையில் பல்வேறு வாய்ச்சுகாதார தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன என்றார். 3M ESPE ஆனது தமது உற்பத்தி மற்றும் தீர்வுகள் வரிசையில் சீரமைப்பு, crown மற்றும் bridge, உட்பொருத்தல், தடுப்பு மற்றும் அழகியல் பற்சிகிச்சை போன்றவற்றை கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, டிஜிடல் வாய் பராமரிப்பு பிரிவின் மூலமும் CAD/CAM மற்றும் டிஜிடல் அழுத்தங்கள் மூலமும் அதிநவீன டிஜிடல் தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்கள் ஒன்றிணைக்கப்படுகிறது. இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்ற 3M ESPE பல்மருத்துவ தயாரிப்புகள் உலக வர்க்கத்திலான செயல்முறை மற்றும் தரத்துடன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பயனுள்ள செலவாக அமைந்துள்ளது.
 
3M ESPE மூலம் கேகாலை, காலி, குருநாகல், அநுராதபுரம், பேராதெனிய, வவுனியா, மட்டக்களப்பு, கம்பளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் 3M தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய திட்டங்கள் ஊடாக பல்மருத்துவ துறையுடன் இணைந்து தரம் வாய்ந்த பல்மருத்துவ துறையை உருவாக்குவதே 3M ESPE இன் இலக்காக அமைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X