2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

ஊழியர் சேமலாபநிதியத்தின் 6.3 வீதமான நிதி - பங்குகளில் முதலீடு

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012 ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் பெரிய சமூக நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தின் மொத்த நிதியில் சுமார் 6.3 வீதமான நிதி, பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், 92.6 வீதமான நிதி அரச முறிகளிலும், எஞ்சிய 0.9 வீதம் கூட்டாண்மை கடன்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் மொத்த பெறுமதி 2012 ஜூன் மாத நிறைவில் 1,083 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. ஜூன் மாத நிறைவில் 2.2 மில்லியன் செயற்படும் அங்கத்தவர்கள் தன்னகத்தே ஊழியர் சேமலாப நிதியம் கொண்டிருந்ததாக இலங்கை மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .