2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

HUTCHக்கு Effie விருது

Gavitha   / 2016 மே 31 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சியடைந்து வருகின்ற 3G வலையமைப்பான HUTCH, வோட்டர்ஸ் எட்ஜில் அண்மையில் இடம்பெற்ற Effie விருதுகள் வழங்கும் நிகழ்வில் இணையம் மற்றும் தொலைதொடர்பாடல் பிரிவில் Effie விருதின் வெற்றியாளராக தெரிவாகியிருந்தது. Sarva Integrated விளம்பர நிறுவனத்தின் கருப்பொருளில் தயாரிக்கப்பட்ட 'Always Internet' பிரசாரமானது, நாட்டில் மிகவும் திறன்மிக்க தொலைதொடர்பாடல் பிரசாரங்களுள் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தைப்படுத்தல் திறனை வெளிக்காண்பிக்கும் சர்வதேச Effie விருதுகள் நிகழ்வு கடந்த காலங்களில் விளம்பரத் தொழிற்றுறையினரது திறனை மதிப்பீடு செய்யும் ஒரு களமாக மாறியுள்ளதுடன், வாடிக்கையாளர் நிறுவனங்களின் வியாபாரத்தின் வெற்றிக்கும் வழிகோலுகின்றது. தற்சமயம் சர்வதேசரீதியாக 6 பிராந்தியங்களிலும், 42 நாடுகளிலும் Effie விருது நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கையில் Effie விருதுகள் நிகழ்வு 2008ஆம் ஆண்டு முதலாக இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிலையத்தின் (SLIM) பங்குடமையுடன் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.  

இந்த இனங்காணல் அங்கிகார வெற்றி தொடர்பாக Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா கூறுகையில், 'இலங்கை மக்களின் வாழ்வில் குறிப்பிடும்படியான மாற்றத்தை ஏற்படும் முயற்சிகளை Hutch தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளதுடன், தொடர்ந்தும் வளர்ச்சிகண்டு வருகின்ற எமது வாடிக்கையாளர்களே எமது மகத்தான வர்த்தகநாமத் தூதுவர்களாகத் திகழ்கின்றனர். Hutch நிறுவனத்தின் புத்தாக்கம்மிக்க 'Always Internet' உற்பத்திக்கு SLIM Effie விருது கிடைக்கப்பெற்றமை இந்த உற்பத்தி மற்றும் அது தொடர்பான பிரசாரம் ஆகியன சந்தையில் ஏற்படுத்தியுள்ள சிறப்பான தாக்கத்துக்கு அங்கிகாரமாக அமைந்துள்ளது. பகுத்தறிவு மட்டத்தில் மக்களை இணைக்கின்ற, உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற எண்ணங்களைப் பாராட்டுவதாக இது அமைந்துள்ளது' என்றார்.

Sarva Integrated (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான கிறிஷாந்த ஜெயசிங்க குறிப்பிடுகையில், 'Hutch நிறுவனத்தின் சார்பில் இம்முறை இரண்டாவது 'Effie' விருதைப் பெற்றுள்ளமையையிட்டு பெருமை கொள்கின்றோம். வளர்ச்சிப் பெறுபேறுகளை ஈட்டுவது மட்டுமன்றி, விருதுகளையும் வெல்லும் வகையிலான படைப்பாக்கத்திறனை வெளிக்கொணர எமக்கு ஆதரவளிக்கின்றமைக்காக Hutch அணிக்கு கட்டாயமாக நன்றி தெரிவிக்க வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .