2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

Hutch சேவைகள் விரிவாக்கம்

Editorial   / 2020 மார்ச் 03 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எடிசலாட் லங்கா (பிரைவேட்) லிமிடெட் (Etisalat) நிறுவனத்தை 2018ஆம் ஆண்டில் தனது மூலோபாய கையகப்படுத்துதலுக்கு உட்படுத்தி முக்கியமான சாதனையொன்றை நிலைநாட்டியிருந்த Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, தற்போது மேற்குறிப்பிட்ட இரு வலையமைப்புக்களுக்கும் இடையேயான கூட்டிணைப்பு வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. பல கட்டமைப்புகளிலிருந்து வாடிக்கையாளர்களை உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு மாற்றுவதே இதன் நோக்கமாகும்.  

மிகப்பாரிய வலையமைப்பு கூட்டிணைப்பு இப்போது நாடு முழுவதும் 2G, 3G மற்றும் 4G சேவைகளின் விசாலமான, சிறந்த வலையமைப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இது இடமளிக்கும் என உலகளாவில் மாபெரும் தொலைதொடர்பு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற CK Hutchison Holdings இன் உள்நாட்டு துணை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அத்துடன், நிறுவனம் தனது புதிய வெளித்தோற்றம், வர்த்தகநாம பெறுமான நிலைத்தோற்றமான “Be. Anywhere” என்பதையும் வெளியிட்டுள்ளதுடன், இலங்கையில் தனது 4G வலையமைப்பு உள்ளடக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளமையைக் கொண்டாடும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது. 

இவ் வலையமைப்பு மேம்பாடு அனைத்து 25 மாவட்டங்களிலும் சனத்தொகையில் 95% இனை உள்ளடக்குவதுடன், அதே சமயம் 12,000க்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு சேவைகளை வழங்குகின்றது. 3,500க்கும் மேற்பட்ட தளங்கள் கூட்டிணைக்கப்பட்ட நிலையில், 4G வலையமைப்பு விரிவாக்கம் என்பது ஒரு சிக்கலான செயல்முறையாக இருந்தது. இலங்கையைச் சேர்ந்த மொத்தமாக 400க்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உதவிப் பணியாளர்கள், ஏனைய பல நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் ஒன்று சேர்ந்து இச் செயற்றிட்டத்தை 12 மாத காலத்துக்குள் பூர்த்தி செய்து சாதனையை நிலை நாட்டியுள்ளனர். தனது தீவிரமான விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மேம்பட்ட வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளமைக்கு மேலாக, குரல், தரவு மற்றும் பிற சேவைகளில் மிகவும் சிக்கனமான கட்டணங்களில் ஒரு விரிவான உற்பத்தி வரிசையை செயல்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .