2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’ ஊக்குவிப்பு திட்டம்

Editorial   / 2020 மார்ச் 10 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் Kaspersky உற்பத்திகளின் ஏக விநியோகஸ்தராக திகழ்கின்ற சவுத் ஏசியன் டெக்னோலஜீஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமானது, ‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’ (Kaspersky Mega Surprise) என்ற புதுமையான ஒரு விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தை இலங்கையிலுள்ள Kaspersky வாடிக்கையாளர்களுக்காக அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. 

Kaspersky இன் உற்பத்தி தொடர்களான Kaspersky Internet Security, Kaspersky Total Security, Kaspersky Internet Security for Android, Kaspersky Safe Kids ஆகியவற்றை உள்ளடக்கிய விதத்தில் இந்த ஊக்குவிப்புத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டம் 2020 ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.  

இதன்படி, Kaspersky வாடிக்கையாளர்களுக்கு ‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’ என்ற விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தின் ஊடாக தொலைக்காட்சிப் பெட்டிகள், கார்கில்ஸ் புட் சிட்டி வவுச்சர்கள், கையடக்கத் தொலைபேசிகள், வெகியூம் கிளீனர்கள், மைக்ரோவேவ் அவன் அடுப்;புக்கள், ரைஸ் குக்கர்ஸ் உள்ளடங்கலாக பல்வேறுபட்ட வீட்டுப் பாவனைப் பொருட்களை பரிசுகளாக வென்றெ டுப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .