2021 ஜனவரி 20, புதன்கிழமை

Kaspersky 2020 இலங்கையில் அறிமுகம்

Editorial   / 2019 நவம்பர் 07 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

Kaspersky, அண்மையில் தனது புதிய பாதுகாப்புத் தீர்வான ‘Kaspersky 2020’ ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Kasperskyஇன் விநியோக நிறுவனமான South Asian Technologies Private Limited நிறுவனத்துடன் இணைந்து இந்தப் புதிய தீர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.   

சிறந்த பாதுகாப்புத் தீர்வுகளை அடிக்கடி புதுப்பிப்பது மிக முக்கியமானது. இது, வைரஸ் தடுப்புத்தரவுத் தளத்தை மாத்திரம் புதுப்பிப்பதற்கு மட்டுப்படுத்தப்படாது, புதிய அம்சங்களையும், தற்போது உள்ளவற்றை மேம்படுத்துவதோடு, வைரஸ் தடுப்புக்களின் முக்கியமான இயக்கவியலை சீரமைத்தலும் அவசியமாகும்.   

அண்மைக் காலங்களில் பல்வேறு வகையான வைரஸ் அச்சுறுத்தல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பதில்கள் அவசியமாகும்.   இவ்வருடம் Kaspersky WannaCry அல்லது SMBloris போன்ற தீங்கிழைக்கும் மென்பொருட்களினால் பயன்படுத்தப்படும் கொடிய EternalBlue போன்ற வலையமைப்பு சுரண்டல்களுக்கு எதிரான பாதுகாப்புக்களையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இவ்வகையான சுரண்டல்கள் தவிர்க்க முடியாத வகையில் வலையமைப்பு பூராகவும் பரவுவதற்கு அனுமதிக்கின்றது. இது, பாதுகாப்பு அற்ற எந்தவொரு சாதனைத்தையும், அத்தகைய முக்கியமான அச்சுறுத்தல்களுக்கு ஏதிரான இரும்புக் கவசப் பாதுகாப்புக்கு எதிராகவும் செயற்படுகிறது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .