2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

சிறார்களின் ஆபாசப் படங்கள்: எலானுக்கு அழைப்பாணை

S.Renuka   / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எக்ஸ் சமூக வலைத்தளமும், அதனுடன் தொடர்புடைய செயற்கை நுண்ணறிவு கருவியான குரோக் பயன்பாட்டும் தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பிரான்சின் பாரீஸ் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறார்களை குறிவைத்து சட்டவிரோத ஆபாச உள்ளடக்கங்கள் பரவியதுடன், பெண்களின் உருவங்களை மாற்றி அமைக்கும் டீப்பேக் தொழில்நுட்பத்தின் மூலம் அசிங்கமான படங்கள் உருவாக்கப்பட்டதாகவும், தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டதாகவும் ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து பெரும் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.மேலும், சிறுவர் ஆபாசப் பதிவுகளை சேமித்து பரப்பும் செயல்பாடுகளில் எக்ஸ் தளம் மறைமுகமாக உடந்தையாக இருந்ததாகவும் விசாரணையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தின் தற்போதைய தலைவர் எலான் மஸ்க் மற்றும் முன்னாள் தலைவர் லிண்டா யாக்காரினோ ஆகியோருக்கு நேரில் ஆஜராகுமாறு பிரான்ஸ் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், இந்த விசாரணை அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது என்றும், இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான முயற்சி என்றும் எலான் மஸ்க் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விவகாரம், உலகளவில் சமூக வலைத்தளங்களின் பொறுப்புகள் குறித்து தீவிர விவாதத்தை தூண்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .