2021 மே 15, சனிக்கிழமை

Virtusa Polaris நிறுவனத்துக்கு தங்க விருது

Gavitha   / 2016 ஜூலை 31 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

Virtusa Corporation மற்றும் olaris Consulting & Services Ltd ஆகிய நிறுவனங்களின் சந்தையை நோக்கிய வர்த்தக நாமமான ஏசைவரளய Virtusa Polaris, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தேசிய மனித வள மாநாட்டில் இலங்கை ஆளணி முகாமைத்துவ கற்கைநிலையத்திடமிருந்து ((IPM), 'தேசிய மனித வள மேன்மைக்கான தங்க விருதை' பெற்றுள்ளது. இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனை மற்றும் வெளிச்சேவையமர்வு சேவைகளை வழங்குவதில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்றது.

Virtusa Polaris நிறுவனத்தின் அதிசிறந்த மனித வள முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் நிறுவனத்தின் செயல்திறனை முன்னெடுத்துச் செல்வதில் அதன் பங்களிப்பு ஆகியவற்றிற்கான இனங்காணல் அஙகிகாரமாகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Virtusa Polaris நிறுவனத்தின் மனித வள துறை சிரேஷ;ட பணிப்பாளரான சாந்தி தர்மரட்ண கூறுகையில், 'தனது அதி உயரிய சொத்தான எமது அணி உறுப்பினர்களை விருத்தி செய்வதில் காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டிற்காக பெருமதிப்புமிக்க இந்த மேடையில் இனங்காணல் அங்கிகாரத்தைச் சம்பாதித்துள்ளமை உண்மையில் மிகவும் கௌரவம் அளிக்கின்றது. எமது அணி உறுப்பினர்களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுகின்ற சூழல் ஒன்றைக் கட்டியெழுப்பி, செயல்திறன் முகாமைத்துவத்திற்கு ஆதரவளித்து, ஒத்துழைப்பின் மூலமாக புத்தாக்கத்தை மேம்படுத்துவதை ஊக்குவிப்பதில் நாம் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

Virtusa Polaris நிறுவனத்தின் பிரதம பணியாளர்கள் அதிகாரியான சுந்தரராஜன் நாராயணன் கூறுகையில், 'எமது பணியாளர்கள் மீது நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாடு, அவர்கள் கற்று, விருத்தியடைந்து மற்றும் ஓத்துழைத்து அதன் மூலமாக தமது வளர்ச்சிவாய்ப்புக்களைப் பூரணமாக அடைந்துகொள்ள இடமளிக்கும் அடுத்த தலைமுறை பணிச்சூழலை அவர்கள் மத்தியில் தோற்றுவிக்கும் எமது தளராத முயற்சிகள் ஆகியவற்றிற்கான மற்றுமொரு அங்கிகாரமே இந்த விருதாகும்.

நிறுவனத்தின் மனித வள வேலைத்திட்டங்கள் மற்றும் தளமேடைகளை நாம் தொடர்ச்சியாக மேம்படுத்தி, நிறுவனத்தில் அனைத்து பதவி நிலைகள் மற்றும் நிலைமட்டங்களில் அவர்களுக்கு ஆதரவளிப்பதை நாம் உறுதிசெய்து வருகின்றோம். அதன் பிரதியுபகரமாக, அவர்களுடைய புத்தாக்கமான பணிகள், சந்தையில் எமது வர்த்தகநாமத்தின் வளர்ச்சியை தக்க வைப்பதற்கு எமக்கு உதவியுள்ளன.' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .