Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT புறோட்பேண்டுக்கு தனித்துவமான மற்றும் சிறப்பான சலுகை அளிப்புக்களை ஸ்ரீலங்கா ரெலிகொம் (SLT) அறிவித்துள்ளது. ஊக்குவிப்பு காலத்தின் போது இலவச புறோட்பேண்ட் இணைப்பு மற்றும் இலவச மின்னஞ்சல் கணக்கு என்பன விNஷட சலுகையாக வழங்கப்படுகின்றது. இந்த பிரசார சலுகையில் பங்குபற்றுவதன் ஊடாக 24 மேசை கணினிகள், 3 மடிக் கணினிகள் மற்றும் 10 பேருக்கு 6 மாதங்களுக்கான இலவச மாதாந்த கட்டணம் போன்ற வெற்றி பெறும் சந்தர்ப்பங்களை வழங்குகின்றது. இந்த சலுகைகள் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி செல்லுபடியாகுவதுடன், குறிப்பிட்டவிதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
SLT புறோட்பேண்ட் வரையறையற்ற பொதி (Unlimited Package)அல்லது கொள்ளளவு அடிப்படையிலான பொதி போன்ற எந்தவொரு பக்கேஜ் உடனும் இந்த சிறப்பான பரிசுகள் கிடைக்கக் கூடியதாகவுள்ளன. வரையறையற்ற பொதியில் வேறுபட்ட இணைய வேகம், மாதாந்த வாடகை மற்றும் வீட்டு அல்லது அலுவலக பாவனைக்கு தெரிவுசெய்யக் கூடிய இலவச மின்னஞ்சல் முகவரிகள் என்பவற்றின் அடிப்படையில் வேறுபட்ட 4 உப பொதிகள் கிடைக்கக் கூடியதாகவுள்ளன. கொள்ளளவு அடிப்படையிலான பொதியில் தமது பட்ஜெட்டுக்கு ஏற்றவகையில் சிறந்த வேகத்தில் இணையத்தில் உலாவுவதற்கான வாடிக்கையாளர்களுக்கான 4 மேலதிக தெரிவுகளை கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தெரிவுசெய்வதற்கான முழுமையான தெரிவுச் சந்தர்ப்பங்களை வரையறையற்ற பொதி மற்றும் கொள்ளளவு அடிப்படையிலான பொதி ஆகிய இரண்டுபொதிகளும் வழங்குகின்றன. இவற்றின் ஊடாக அதிகபட்ச பெறுமதி சேர் சேவைகளும், உச்சமான சேமிப்புக்களையும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கின்றனர். இந்த பொதிகளுக்கான சந்தாதாரர்கள் Virtual Mail சேவைகள் மற்றும் இணையத்தள பெயர் சேவைகள் போன்ற வேறு பெறுமதி சேர் சேவைகளையும் பெற்றுக் கொள்ளமுடியும். தற்போதுள்ள SLT புறோட்பேண்ட் வாடிக்கையாளர்கள், வரையறையற்ற SLT புறோட்பேண்ட் பொதிகளுக்கு இலவசமாக மாற்றக் கூடியவசதிகளும் உள்ளன. ஏனைய அனைத்து சேவை பரிமாற்றங்களுக்கும் சிறு கட்டணம் அறவிடப்படும்.
அண்மைய மாதங்களில் தமது புறோட்பேண்ட் சேவைகளில் பல விரிவாக்கங்களை ஸ்ரீலங்கா ரெலிகொம் மேற்கொண்டுள்ளது. தற்போதுள்ள கற்றை அகலத்தினை குறிப்பிட்டளவில் அதிகரிப்பதன் ஊடாக, தமது புறோட்பேண்ட் மற்றும் சர்வதேச இணைய வலையமைப்புக்களை தற்போதுள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து எழுப்பப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், புதிய வாடிக்கையாளர்களின் உறுதியான கோரிக்கைகளுக்கு வசதியளிக்கும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊக்குவிப்பு திட்டம் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிவரையான ஒருமாத காலப் பகுதிக்கு செல்லுபடியாகுவதுடன், அதிசிறந்த புறோட்பேண்ட வலையமைப்பு மற்றும் சேவை தரத்தின் ஊடாக தற்போதைய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் மத்தியில் போதியளவு ஆர்வம் மற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது.
மேலதிக தகவல்களுக்கு www.slt.lk என்ற இணையத் தளத்திற்கு விஜயம் செய்யுங்கள் அல்லது 011 2555 555 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
59 minute ago