2021 ஜனவரி 27, புதன்கிழமை

Construction Expo 2012 கண்காட்சியில் சிறந்த காட்சிகூடத்துக்கான விருது ஆர்பிகோ வசம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற Construction Expo 2012 நிர்மாணத்துறையை சேர்ந்த கண்காட்சியில், சிறந்த காட்சிகூடத்தை அமைத்திருந்தமைக்கான விருது, றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் (ஆர்பிகோ) தேசிய உற்பத்தி மற்றும் விநியோக பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் நிர்மாணத் துறையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றிருந்த இந்த Construction Expo 2012 கண்காட்சியின் விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் தலைமையின் கீழ் கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.

Construction Expo 2012 கண்காட்சியை பார்வையிட வருகை தந்திருந்த பார்வையாளர்கள் அநேகமானோரின் கவனத்தையும் ஈர்த்திருந்த றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் காட்சிகூடத்தில் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் மக்களின் அபிமானத்தை வென்ற தயாரிப்புகளான நீர் தாங்கிகள், ஆர்பிடெக் நீர் பம்பிகள், PVC நீர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள், வௌ;வேறு ரகங்களில் அமைந்த ஆர்பிகோ மெத்தைகள், CFL மின்குமிழ்கள், வௌ;வேறு ரகங்களில் அமைந்த தளபாடங்கள், ரெஜிபோம், இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக், சீலிங் மின்விசிறிகள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் (ஆர்பிகோ) தேசிய உற்பத்தி மற்றும் விநியோக பிரிவின் விற்பனை முகாமையாளர் டெரிக் பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'Construction Expo 2012 கண்காட்சியின் போது, இலங்கையின் நிர்மாணத்துறையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் காட்சிகூடங்களுடன் போட்டியிட்டு, அவற்றை பின்தள்ளி சிறந்த காட்சிகூடத்துக்கான விருது எமக்கு கிடைத்துள்ளமையானது, எமக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் நம்பிக்கையை வென்ற பல தயாரிப்புகளை வழங்கும் வர்த்தக நிறுவனமாக திகழும் எமது காட்சிகூடத்தை பார்வையிட பெருமளவான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தமை எமக்கு பெருமையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆர்பிகோ என்பது, இந்நாட்டு பாவனையாளர்களுக்கு புதிய மற்றும் செலுத்தும் பணத்துக்கு உயர் பெறுமதியை வழங்கும் வகையில் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனமாகும். பார்வையாளர்களின் கவனைத்தை ஈர்த்திருந்த காட்சிகூடத்தில் தூய்மையானதும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை இலகுவாக்கிடும் வகையில் பல்வேறு தெரிவுகளில் அமைந்த நீர்தாங்கிகள், சந்தையில் விற்பனையாகும் நீர் பம்பிகளில் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் ஆர்பிடெக் நீர் பம்பிகள், உணவு தயாரிப்புக்கு அவசியமான காஸ் மற்றும் கொம்போஸ்ட் உரத்தை வழங்கும் கிறீன் காஸ் கட்டமைப்பு, சௌகரியமான உறக்கத்தை வழங்கும் வௌ;வேறு தெரிவுகளில் அமைந்த ஆர்பிகோ மெத்தைகள், இலங்கை பாவனையாளர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியிருந்த CFL மின்குமிழ்கள் மற்றும் வெவ்வேறு வடிவங்களில் அமைந்த வீட்டு தளபாடங்கள் போன்றன இந்த விருதை எமக்கு உறுதி செய்வதாக அமைந்துள்ளன' என்றார்.

20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிளாஸ்ரிக் நீர் தாங்கிகள் அறிமுகப்படுத்தியிருந்த றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் செயற்பாட்டு திறனை கௌரவிக்கும் வகையில் ISO 9001:2008 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆர்பிகோ நீர் தாங்கிகளில், ட்ரிபல் லேயர் தாங்கி, சம்ப் தாங்கி, அக்குவா டஃவ் நீர் தாங்கி, குப்பை தாங்கிகள், செப்டிக் தாங்கி மற்றும் கொம்போஸ்ட் தாங்கி போன்ற பிளாஸ்ரிக் தாங்கிகள் பல உள்ளடங்கியுள்ளன. நவீன மற்றும் பூரண நீர் தீர்வுகளை வழங்கும் இந்நாட்டின் முன்னணி நிறுவனமாக ஆர்பிகோ, அனைத்து நீர் தொடர்பான தீர்வுகளுக்கும் பயன்படுத்தக்கூடிய ஆர்பிடெக் நீர் பம்பிகள், ஆர்பிகோ PVC நீர் கட்டமைப்புகள் மற்றும் இறப்பர் ஹோஸ் பம்பிகள், ஆர்பிகோ PVC நீர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. SLS தரச்சான்றிதழ் வழங்கப்பட்ட உலகின் நவீன தொழில்நுட்பத்துக்கு அமைவாக தயாரிக்கப்படும் PVC நீர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் அனைத்து நீர் கட்டமைப்புகளுக்கும் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

ISO மற்றும் SLS போன்ற தரச்சான்றுகளை பெற்றுள்ள இலங்கையின் முதலாவது ஃபோம் மெத்தையான ஆர்பிகோ மெத்தைகள் இலங்கையின் பாவனையாளர்களின் நம்பிக்கையை வென்ற சந்தையில் முன்னோடியாக திகழும் தயாரிப்பாக விளங்குகிறது. வௌ;வேறு வடிவங்கள் பலவற்றில் அமைந்த ஆர்பிகோ மெத்தை சௌகரியமான நித்திரையை உறுதி செய்யும் தயாரிப்பாக அமைந்துள்ளது.

வீட்டு, தொழில்சார் மற்றும் விவசாய எனும் மூன்று துறைகளில் பயன்படுத்தக்கூடிய உற்பத்தித்திறனை அதிகரிக்கக்கூடிய நீர் பம்பிகள் 32இனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள ஆர்பிடெக் நீர் பம்பிகள் ஈய படிமம் அற்ற துருப்பிடிக்காத இல.306 சேர்மானத்தில் இலங்கையில் தயாரிக்கப்படும் முதலாவது நீர் பம்பியாக அமைந்துள்ளமையால், நீர் இறைக்கும் போது, துருக்கள் உடலினுள் சென்று ஏற்படக்கூடிய நோய்களை முற்றாக தவிர்த்து 100 வீதம் தூய்மையான தயாரிப்பாக அமைந்துள்ளது. விசேடமாக, ஆர்பிடெக் பம்பிகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தமது ஆர்பிடெக் நீர்பம்பிகளில் மற்றும் நீர் கட்டமைப்புகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் 'Arpitec Doorstep service' எனும் சேவையை வழங்குகிறது. இலங்கையை சேர்ந்த நீர்பம்பி வகைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இதுபோன்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ள முதலாவது நிறுவனமாக ஆர்பிகோ அமைந்துள்ளது.

ஆர்பிகோ மூலம் புதிதாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த வீட்டு தளபாடங்கள், தலைநகர் உள்ளடங்கலாக நாட்டின் முன்னணி நகரங்கள் பலவற்றில் அமைந்துள்ள காட்சியறைகளின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். கண்கவர் வடிவங்களில் வீட்டை முற்றிலும் அலங்கரித்திடும் வகையில் அமைந்துள்ள இந்த தளபாடங்கள் வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை உறுதி செய்திடும் வகையில் அமைந்துள்ளன.

80 வருடங்களுக்கு அதிகமான உயர் பாரம்பரிய வரலாற்றையும், 35000இற்கும் அதிகமான ஊழியர்களையும் கொண்டுள்ளதுடன், இலங்கையின் மிகப்பெரிய தேசிய குழும வியாபார நிறுவனமாக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம், பல்வேறு துறைகளில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதிகளவு சந்தைவாய்ப்பை தன்னகத்தே கொண்ட பல்வேறு தயாரிப்புகளின் தாயகமாக திகழும் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம், இந்நாட்டின் சுப்பர் மார்க்கெட்கள், பெருந்தோட்டத்துறை, பங்குச்சந்தை முகவர் சேவைகள், ரயர், பிளாஸ்ரிக் மற்றும் நிர்மாணத்துறை போன்ற துறைகளிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. நகர் பகுதிகளை போலவே, கிராமிய மட்டத்திலும், பலராலும் நேசிக்கப்படும் நாமமாக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம் திகழ்கிறது. பிரதானமாக ஆர்பிகோ வர்த்தக நாமத்தை விசேடமாக குறிப்பிட முடியும். நாடு பூராகவும் இந்த வர்த்தக நாமத்தை சேர்ந்த தயாரிப்புகள் கிடைக்கின்றமை விசேட அம்சமாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .