2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

Digital House அறிமுகப்படுத்திய BENQ கமெராக்கள்

A.P.Mathan   / 2011 நவம்பர் 14 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற BENQ கமெராக்களை அறிமுகப்படுத்தும் 'இமேஜ் டுடே' கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

எட்டு வித்தியாசமான மாதிரிகளில் இலங்கை சந்தைக்கு முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்படுகின்ற கமெராக்கள் மிக அழகிய தோற்றத்தையும் மெல்லிய உருவத்தையும் கொண்ட வகையில் அமைந்துள்ளன.

அமெரிக்க தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கமெராக்கள் இலங்கை டிஜிட்டல் கமெரா சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அதன் உள்ளூர் முகவர் நிறுவனமான டிஜிட்டல் ஹவுஸ் தெரிவித்துள்ளது.

'கமெராக்களை கொள்வனவு செய்யும் பாவனையாளர்களுக்கு விற்பனையின் பின்னர் பல சேவைகளை வழங்கவுள்ளோம். கமெராவுக்கான ஒரு வருட உத்தரவாத காலம் வழங்கப்படும். அதுதவிர மாற்று கமராவும் (நிபந்தனைக்குட்பட்டது) 7 வேலை நாட்களுக்குள் கையளிக்கப்படும்' என டிஜிட்டல் ஹவுஸ் நிறுவனத்தின் உற்பத்தி முகாமையாளர் அக்தார் மொஹமட் தெரிவித்தார்.

அனைத்து BENQ கமெராக்களும் குறைந்தபட்சம் 14 மெகாபிக்ஸல் கொண்டதாக அமைந்துள்ளது. அத்துடன் யாரும் எதிர்பார்க்காக மலிவு விலையிலேயே இவை விற்பனை செய்யப்படவுள்ளது. கண்காட்சியின்போது வோட்டர்புரூப் (Waterproof) கமெராக்கள் தண்ணீர் தாங்கியில் போடப்பட்டு அது தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன் தண்ணீரில் 5 மீற்றர் ஆழத்தில் 2 மணித்தியாலயம் வரையில் இக்கமெராக்களை கொண்டு படங்களை பிடிக்கலாம்.

P1410, S1430, LM100, AE200, AE100, C1460 மற்றும் C1430 ஆகிய 7 ரகத்தை சேர்ந்த கமெராக்களும் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் அதியுயர் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது. 720P உயர்தர வீடியோ ரெக்கோடிங்கும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

அமெரிக்காவின் முன்னணி நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கமெராக்களில் இத்தகைய பல்வேறு வகையான சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் ஹவுஸ் (தனியார்) நிறுவனம் டிஜிட்டல் குரூப் ஒப் கம்பனியின் (DGS) இணை நிறுவனமாகும். 1993 முதல் தனது பணிகளை இலங்கையில் ஆரம்பித்து மிக வெற்றிகரமாக நிறுவனம் இதுவரையில் இயங்கிவருகின்றது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக இலங்கையில் முன்னிலை பெற்றுள்ள 10 நிறுவனங்களில் DGS நிறுவனமும் இடம்பெற்றுள்ளமை அதன் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது.

அவர்கள் தமது சேவைகளை மிக நேர்த்தியாக செய்து வருகின்றதுடன் பல்வேறு வகையான உற்பத்திகளை சர்வதேச தரத்துக்கேற்ப அமைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் சிங்கப்பூரின் கொபியன் நிறுவனத்துடன் கூட்டிணைந்து சிப் (Chip) ரகத்திலான திருத்த பணிகளையும் மேற்கொண்டுவருகின்றது. அத்துடன் ESET நிறுவனம் வைரஸ்களிலிருந்து கணினிகளை பாதுகாக்கும் மென்பொருள் உற்பத்தியாளர்களாகவும் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .