2021 மே 10, திங்கட்கிழமை

புதிய வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் ESET நிறுவனத்தினால் அறிமுகம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகம் முழுவதிலும் நாளாந்தம் கணினி பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மறுமுனையில் கணினி ஊடாக இடம்பெறும் குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது.

எம்மில் பலர் இன்று தமது ஆவணங்களை கணினி மயப்படுத்தியே வைத்துள்ளனர். வங்கி நடவடிக்கைகளைகூட இணையத்தின்மூலமே மேற்கொள்ளும் அளவுக்கு கணினி நாளாந்த வாழ்க்கையில் அத்தியாவசியமாக உருவெடுத்துள்ளது.

மறுபுறம் சைபர் கிரைம்கள், கடனட்டை மோசடிகள் போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் இணையம் ஊடாக இடம்பெறுவதும் அதிகரித்துள்ளது. முன்பு தனியொருவர் தனது ஆற்றலை வெளிப்படுத்தவே வைரஸ்களை கணினிகளுக்கு பரப்பியதை காணலாம்.

நாளடைவில் அது முழுமையாக மாற்றமடைந்து திட்டமிட்டு குற்றச் செயல்களை இலகுவாக மேற்கொள்ளும் நோக்கில் வைரஸ்கள் கணினிகளுக்கு பரப்படுகின்றது.

கணினிகளுக்கு இணையம் ஊடாக ஏற்படக்கூடிய வைரஸ் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ESET நிறுவனம் தமது புதிய இரண்டு வைரஸ் மென்பொருள் பொதியான ESET Smart Security 5, ESET NOD32 Antivirus 5 என்பவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ESET Smart Security 5, ESET NOD32 Antivirus 5 ஆகிய வைரஸ் பாதுகாப்பு மென்பொருளில் பல்வேறு வகையான சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ESET live grid, cloud based reputation , protection Technology, New removable media control போன்றனவே அவையாகும்.

சிறுவர்கள் பாலியல் ரீதியான இணையத்தளங்களை பார்வையிடுவதை தடுக்கவோ, அநாவசியமான இணையத்தளங்களில் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள Parental Control  எனப்படும் பெற்றோர் பாதுகாப்பு திட்டமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு தமது பிள்ளைகள் பார்வையிடக்கூடிய இணையத்தளங்களை அனுமதிக்கவோ அல்லது அவற்றை தடைசெய்யவோ, கட்டுப்படுத்தவோ இதன்மூலம் மேற்கொள்ளலாம். தமது பிள்ளைகள் அநாவசியமான இணையத்தளங்களை பார்வையிடுகின்றார்களா? என்ற சந்தேகமும் அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

ESET நிறுவனமானது 1992 முதல் மென்பொருள்களுக்கு தீங்கிழைக்கும் வைரஸ்களுக்கு எதிராக நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்ற முன்னணி நிறுவனமாக உள்ளது. அதுதவிர தனது சேவைக்காக பல்வேறு விருதுகளையும் நிறுவனம் வென்றெடுத்துள்ளமை அதன் ஆளுமைத் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.

 'ESET நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாக DCS நிறுவனமே உள்ளது.  மஹசோனா, கத்ரா, ரீரியக்கா போன்ற உள்ளூர் வைரஸ்களை கண்டுபிடித்து அவை கணினிகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை நீக்கும் வகையில் இந்த வைரஸ் காட்கள் உள்ளன. விசேடமாக இலங்கையில் பென் டிரவ், மெமரி காட் போன்றவை ஊடாக ஏற்படும் வைரஸ் தாக்கங்களிலிருந்து கணினிகளை பாதுகாக்கும் முதன்மை நிறுவனமாக ESET உள்ளது. இலங்கை கணினி அவசர குழுவினருடன் இணைந்து இக்குழு பணியாற்ற கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருகின்றது. ஹொனி பொட் என்ற விசேட உபாயங்களையும் இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அதுதவிர இலங்கையில் தீங்கிழைக்கும் மென்பொருள்களை கண்டுபிடித்து அவற்றையும் கட்டுப்படுத்துகின்றது' என DCS நிறுவனத்தின் பணிப்பாளர் சிஹான் என்னன் தெரிவித்தார்.

ESET Smart Security 5 இன் மூலம் வீடுகளில் கணினி பாவனையாளர்கள் எதிர்நோக்கும் இணையத்தளம் ஊடாக ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.

இவற்றை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த புதிய இரண்டு வைரஸ் காட்களை அறிமுகப்படுத்த ESET நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது சிறப்பம்சமாகும்.

கடந்த 20 ஆண்டுகளாக டிஜிட்டல் ஹவுஸ் (பிரைவட்) நிறுவனம் இலங்கையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகின்றது. அத்துடன் நிறுவனத்தின் மொத்த சந்தை புரள்வாக 1.2 பில்லியன் ரூபா பதிவாகியுள்ளது. மூன்று கிளை நிறுவனங்களையும், மூன்று காட்சியறைகளையும் கொண்டுள்ள நிறுவனம் Kingston, Mercury, Genius ஆகியவற்றை விநியோகித்து வருகின்றது.

வைரஸ்களுக்கு எதிராக செயற்படும் உலகின் முன்னணி நிறுவனமாக ESET உள்ளது. அத்துடன் தமது இலங்கைக்கான பிரதிநிதியாக DCS நிறுவனத்தை 2009 டிசெம்பரில் நியமித்தது. 2010இல் ESET நிறுவனம் சந்தை பங்குவீதத்தில் 12 வீதத்தை கொண்டுள்ளது. இவ்வருட முடிவுக்குள் அதனை 25 வீதமாக உயர்த்துவதே தமது இலக்கு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

DCS நிறுவனத்தின் தாய் நிறுவனமாக டிஜிட்டல் ஹவுஸ் (பிரைவட்) காணப்படுகின்றது. இந்நிறுவனத்துடன் இணைந்துகொண்டவர்கள் பல்வேறு பயன்களை பெற்றுவருவதை காணக்கூடியதாக உள்ளது. Pix: Nisal Baduge


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X