2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

HUTCH வழங்கும் 'பிஸி டியூன்' (BUSY TUNE)

A.P.Mathan   / 2011 ஜூன் 24 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பொன்றை நீங்கள் எடுக்கிறீர்கள். மறு முனையில் தொலைபேசி மணி ஒலிக்கிறது. ஆனால் எவரும் அதற்குப் பதிலளிப்பதாகத் தெரியவில்லை. சிறிது நேரம் பொறுத்துப் பார்க்கிறீர்கள், பதிலில்லை. ஏமாற்றத்துடன் தொலைபேசியை நீங்கள் வைக்கிறீர்கள். மறுமுனையில் அழைத்தவர் பேசவில்லையே என உங்கள் மனதில் ஏமாற்றம், வெறுப்பு, கவலை, சந்தேகம், கோபமென பல்வேறு உணர்வுகள். அது உங்கள் ஏனைய அன்றாடப் பணிகளையும் பாதிக்கலாம்.

மறுமுனையிலோ, நீங்கள் அழைத்தவர் அந்த நேரத்தில் என்ன செய்துகொண்டிருந்தாரென உங்களுக்குத் தெரியாதிருக்கலாம். அவர் அவசர கூட்டமொன்றில் உரையாற்றிக்கொண்டு இருந்திருக்கலாம். அல்லது வாகனமொன்றைச் செலுத்தியபடி இருந்திருக்கலாம், அல்லது முக்கியமான விரிவுரையொன்றைச் செவிமடுத்தபடி அமர்ந்திருக்கலாம். அல்லது சுகவீனமுற்று வைத்தியரைச் சந்தித்துக் கொண்டிருக்கலாம். உங்களது தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்க விரும்பினாலும் அவர் அந்த நேரத்தில் பதிலளிக்க முடியாத நிலையில் என்ன செய்வதென அறியாமல் இருந்திருக்கலாம்.

இத்தகைய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டே HUTCH நிறுவனம், பிஸி டியூன் (BUSY TUNE) எனும் புதிய தொழில் நுட்பமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த HUTCH BUSY TUNE தொழில் நுட்ப முறைமையை HUTCH தொலைபேசியில் செயற்படுத்திக்கொண்டால், உங்களுக்குத் தொலைபேசி அழைப்புகள் வரும்போது பதிலளிக்க முடியாவிட்டால் நீங்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தானாகவே கூறிவிடும் வசதி கிடைக்கிறது. அழைத்தவருக்கோ ஏமாற்றமில்லை. தனக்கு ஏதோ ஒரு வகையில் பதில் கிடைத்த திருப்தி, அதுவும் மனிதக் குரல் வழியாகவே பதில் கிடைத்த திருப்தி.

HUTCH நிறுவனத்தின் இந்தப் புதிய தொழில்நுட்பப் பொறிமுறை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பெறுமதி சேர் சேவைகள் பிரிவின் முகாமையாளர் அருள் வாஸ், 'மனித மனங்களின் இயல்புகளைக் கருத்திற்கொண்டே இந்தப் பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

'ஒருவர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொள்ளும்போது தனது அழைப்புக்கு எவரேனும் பதிலளிக்க வேண்டுமென்றே விரும்புவார். அதுவும் தான் அழைத்தவருடன் பேச முடியாவிட்டாலும் யாராவது ஒருவர்  தான் அழைத்தவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் கூறவேண்டுமென எதிர்பார்ப்பது தவிர்க்கமுடியாததே. அதுவும் SMSஐ அவ்வேளை பயன்படுத்துவது கஷ்டமாக இருக்கும்போது ஒருவரின் குரலில் பதில் கிடைத்தால் அழைத்தவருக்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். HUTCH BUSY TUNE அந்தத் திருப்தியை நிச்சயம் தரும்' என்று மேலும் தெரிவித்தார் அருள் வாஸ்.

தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் கிடைக்காது போகும்போது சிலவேளைகளில் குடும்ப அங்கத்தரிடையே சந்தேகங்கள் உருவாகி, குடும்ப உறவுகளில்கூட விரிசல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதேபோன்று நண்பர்களிடையேயும் நட்புகள் முறிவடைவதற்கும் காரணமாக அமைந்துவிடலாம். HUTCH BUSY TUNE இந்தச் சிக்கல் நிலையைப் போக்கி, மனித உறவுகளை இன்னும் நெருக்கமாக்கும்.

HUTCH BUSY TUNE சேவையைப் பாவிக்கும் ஒருவர் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பவராகவும், அக்கறை உள்ளவராய் தனது நேரத்தையும் வேலையையும் திட்டமிட்டவராகவும் தென்படுவார்.

HUTCH BUSY TUNE சேவையைப் பெறவிரும்பும் HUTCH வாடிக்கையாளர்கள் அதனை முதலாவது மாதம் கட்டணமெதுவும் செலுத்தாமல் பரீட்சார்த்த முறையில் பாவித்துப் பார்க்கலாம். இச்சேவையில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் கைக்கடக்கமான மிகச் சிறிய கட்டணத்துடன் இந்தச் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும்.

HUTCH BUSY TUNE சேவையைப் பெறவிரும்பும் HUTCH வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையைத் தமது கையடக்கத் தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள *369# இலக்கங்களை அழுத்துவதன் மூலம் பட்டியலுக்கு (MENU) சென்று அங்கு உங்களுக்கு விரும்பிய மொழியில் விருப்பமான குரலில் தேவையான செய்தியைத் தெரிவுசெய்து கொள்ளலாம்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .