2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சிக்கலில் அப்பிள் i phone 4G

A.P.Mathan   / 2010 ஜூலை 16 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தது அப்பிள் கைத்தொலைபேசிகள். அதனுடைய புதிய வரவான i phone 4G வடிவமானது அப்பிள் நிறுவத்திற்கு பாரிய அவப்பெயரினையும் நஷ்டத்தினையும் ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய அப்பிள் கைத்தொலைபேசிகளை பாவிக்கின்றபொழுது சிக்னல் தடைப்படுவதாக பல முறைபாடுகள் கிளம்பியிருக்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு அந்த கைத்தொலைபேசியின் அன்டனா அமைப்பே காரணமென சுட்டிக்காட்டப்படுகிறது.

அப்பிள் நிறுவனத்தின் அன்டனா பொறியியலாளர் ரூபன் கபலெரோ இது தொடர்பாக ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தார். அப்பிள் தலைவர் ஸ்ரெவ் ஜொப்ஸ் அவர்களுக்கும் இந்த விடயம் தெரியும். இருந்தபோதிலும் எவரும் ஆரம்பத்தில் இதனை கருத்திற்கொள்ளவில்லை. இப்பொழுது பல முறைப்பாடுகள் வரத்தொடங்கியதும்தான் அப்பிள் நிறுவனம் விழித்திருக்கிறது.

அப்பிளின் புதிய கைத்தொலைபேசி கடந்தமாதம் சந்தைக்கு வந்தது. அதிலிருந்து அந்நிறுவனம் பல பில்லியன் டொலர்கள் நஷ்டத்தினை சந்தித்திருக்கிறது. அப்பிளின் போட்டி நிறுவனமான மைக்ரோசொப்ட் புதிய ஐ போனினை நகைச்சுவையாக விமர்சித்திருக்கிறது. ‘அப்பிளின் விஸ்டா’ என சுட்டிக்காட்டியிருக்கிறது. விஸ்டா என்பது மைக்ரோசொப் நிறுவனம் 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஒரு வின்டோஸ். அது மக்கள் மத்தியில் பெரிதும் விமர்சிக்கப்பட்டதால் பல கஷ்டங்களை மைக்ரோசொப்ட் அனுபவித்தது. இப்பொழுது அதேபோல் அப்பிள் நிறுவனமும் திண்டாடுகிறது.

‘கொன்ஸியூமர் றிப்போட்’ என்னும் செல்வாக்குமிக்க நுகர்வோர் அமைப்பு அப்பிளின் புதிய கைத்தொலைபேசியினை சிபாரிசு செய்யமுடியாது என அறிவித்திருக்கிறது. நுகர்வோரினை திருப்திப்படுத்தும் விதத்தில் மாற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டிருக்கிறது.

ஆகையினால், புதிய கைத்தொலைபேசிகளை மீளப் பெறுவது தொடர்பாகவும் அப்பிள் நிறுவனம் ஆலோசித்து வருகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--