Super User / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒராக்கிள் நிறுவனம் தனது பங்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் Open world செயலமர்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வு கடந்த வாரம் முழுவதும் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் 2000க்கும் அதிகமான பங்காளர்கள் உலகின் அனைத்து பாகங்களிலிருந்தும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரக்கிள் நிறுவனத்தின் புதிய மென்பொருட்கள், அவற்றின் அனுகூலங்கள் மற்றும் அவற்றின் மூலம் எவ்வாறு வருமானமீட்டுவது குறித்து அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிகழ்வில் ஒராக்கிள் நிறுவனத்தின் சர்வதேச பிரிவின் சிரேஷ்ட உபதலைவர் ஜட்சன் அல்தொஃப் கருத்து தெரிவிக்கையில், 'எமது இந்த திட்டம் கடந்த வருடம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 50 இற்கும் அதிகமான விசேட திட்டங்கள், 200 இற்கும் அதிகமான விசேட பங்காளர்கள், 25,000 இற்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட வல்லுநர்கள் மற்றும் 5,000 இற்கும் அதிகமான செயற்படுத்தும் வல்லுநர்களும் அங்கம் வகிக்கின்றனர்' என்றார்.
புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
கடந்த வாரம் இடம்பெற்ற Open world செயலமர்வில் ஒராக்கிள் எக்சாலொஜிக் எலாஸ்டிக் கிளவுட் எனும் புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்திருந்தது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஜாவா மென்பொருட்களை மிகவும் சுலபமாக இயங்க வைக்க முடியுமென ஒராக்கிள் அறிவித்துள்ளது.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago