2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சிக்னல் மூலம் ''Signal Strong Teeth' சந்தையில் மீள் அறிமுகம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


யுனிலீவர் நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய வாய்ச்சுகாதார நாமமான 'சிக்னல்' ஆனது 'எதிர்காலத்தில் உறுதியான பற்களை கட்டியெழுப்புதல்' என்ற தொனிப்பொருளுக்கு அமைய பற்துளைகளை நீக்கும் சர்வதேச உற்பத்தியான ''Signal Strong Teeth' இனை மீள் அறிமுகம் செய்துள்ளது. இந்த பற்துளைகளை நீக்கும் ரகங்கள் மற்றும் அவற்றின் தொழில்நுட்பம் போன்றன சர்வதேச பற்சுகாதார அமைப்பு மற்றும் இலங்கை பல்வைத்திய சங்கத்தின் அங்கீகாரங்களை பெற்றுள்ளது.

இரட்டை செயற்பாடுகளை கொண்ட 'Strong Teeth' இல் காணப்படும் புரோ ப்ளோரைட் கூட்டானது (Pro Fluoride Complex) பற்களின் துளைகளுக்கு எதிராக 12 மணித்தியாலங்கள் செயற்படுகிறது. மற்றும் அக்டீவ் மைக்ரோ கல்சியமானது (Active Micro Calcium) பற்களின் சிறிய துளைகளை நிவர்த்தி செய்து பற்களில் துளைகள் ஏற்படுவதை தடுக்கிறது. இவ்விரு செயற்பாடுகளும் பற்களுக்கு கல்சியத்தை வழங்கி பற்களில் துளைகள் ஏற்படுவதை தடுப்பதுடன், உறுதியான பற்களை பெற்றுக் கொடுக்கும்.

இது குறித்து கருத்து தெரிவித்த சிக்னல் வர்த்தக நாம முகாமையாளர் மிஹிர குலதுங்க 'சர்வதேச ரீதியில் காணப்படுகின்ற தரமான வாய்ச்சுகாதார தீர்வுகள் மற்றும் உற்பத்தி பொருட்களை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல் எமது வர்த்தக நாமத்தின் மீள் அறிமுகத்தின் நோக்கமாகும். இவ்வெண்ணத்தை நிறைவேற்றும் முகமாகவே ''Signal Strong Teeth' உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய அறிமுகத்துக்கு உந்துசக்தியாக சிக்னலின் படிப்படியான வளர்ச்சியும், இலங்கையின் முதல்தர வாய்ச்சுகாதார வர்த்தக நாமமாக திகழ்வதும் காரணங்களாக அமைந்துள்ளன' என்றார்.

நடைமுறை மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக யுனிலீவர் நிறுவனத்தின் R&D நிபுணர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் ஊடாக இவ் சர்வதேச சிக்னல் பற்துளைகளுக்கு எதிராக செயற்படக்கூடிய தயாரிப்புகள் மீள அறிமுகப்படுத்தப்படுகிறது. அனைத்து யுனிலீவர் கண்டுபிடிப்புகளினதும் பின்னணியிலும் விஞ்ஞானம் மற்றும்; தொழில்நுட்பம் காணப்படுகிறது. இலங்கை சந்தையில் முதன்முதலாக ப்ளோரைட் அடங்கிய பற்பசையை அறிமுகம் செய்து வைத்தது சிக்னல் வர்த்தக நாமமாகும்.

கடந்த 5 தசாப்தங்களாக இலங்கை வாய் சுகாதாரம் குறித்து சிக்னல் அக்கறை காட்டிவருகிறது. இவ் வர்த்தக நாமமானது இலங்கை மக்களின் புன்னகையை சர்வதேச ரீதியில் பிரசித்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், எதிர்காலத்தில் இலங்கையருக்கு உறுதியான பற்களை பெற்றுக்கொடுப்பது என்ற நோக்கத்துடன், புதிய கண்டுபிடிப்புகள் ஊடாக உறுதியான மற்றும் ஆரோக்கியமான பற்களை உறுதிப்படுத்தி பல வகையிலான பற்பசைகளையும், பற்தூரிகை வகைகளையும் வழங்கிவருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .