2021 ஜனவரி 27, புதன்கிழமை

SLIM வர்த்தக நாம விருதுகள் வழங்கல் 2012 இல் சிபிஎல் நிறுவனத்துக்கு 11 விருதுகள்

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாட்டின் மிகப்பெரும் சொக்லேட் மற்றும் பிஸ்கட் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனமான சிபிஎல் நிறுவனத்தின் பிரதான வர்த்தக நாமங்களில் ஒன்றான றிட்ஸ்பரிக்கு, அண்மையில் நடைபெற்ற 2012ஆம் ஆண்டுக்கான SLIM வர்த்தக நாம விருதுகள் நிகழ்வில் முதன் முறையாக 11 விருதுகளை தனதாக்கியிருந்தது.

ஆண்டின் சிறந்த வர்த்தக நாம விருதை சிபிஎல் நிறுவனத்தின் முன்னணி வர்த்தக நாமமான றிட்ஸ்பரி பெற்றுக் கொண்டிருந்ததுடன், மேலும் நான்கு பிரதான விருதுகளை தனதாக்கியிருந்தது. இதற்கு பிரதான காரணியாக புதிய கண்டுபிடிப்புகளுக்கு அமைய அமைந்த தயாரிப்புகள் அமைந்திருந்தது.

றிட்ஸ்பரி மொத்தமாக நான்கு தங்க விருதுகளையும் ஒரு வெண்கல விருதையும் வென்றிருந்ததுடன், மஞ்சி வர்த்தக நாமம் ஒரு தங்க விருதையும் தனதாக்கியிருந்தது. மஞ்சி வர்த்தக நாமத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறன் கொண்ட பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கென வடிவமைக்கப்பட்டிருந்த சஹான் செவன எனப்படும் 'ஹோப்' குக்கீஸ் வகைகளை தயாரிக்கும் திட்டத்துக்கு ஆண்டின் சிறந்த சமூக பொறுப்புணர்வு வர்த்தக நாமத்துக்கான வெள்ளி விருது வழங்கப்பட்டிருந்தது.

சிபிஎல் குழுமத்தின் பணிப்பாளரும் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரியுமான நந்தன விக்ரமகே இந்த விருதுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், 'இந்த விருதுகள் உண்மையில் எமது ஊழியர் குழாமின் அர்ப்பணிப்பான செயற்பாட்டுக்கு கிடைத்த பெரும் கௌரவமாக நாம் கருதுகிறோம். வாடிக்கையாளர்களின் இரசனைக்கேற்ப தயாரிப்புகளை வழங்குவதில் அவர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. தொடர்ந்தும் நாம் இலங்கையர்களின் அபிமானத்தை வென்ற வர்த்தக நாமமாக திகழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எமது முன்னணி தயாரிப்புகளான மஞ்சி பிஸ்கட்ஸ், றிட்ஸ்பரி சொக்லேட்ஸ், டியாரா கேக் வகைகள், சமபோஷ மற்றும் லங்கா சோய் போன்றவற்றின் மீது தொடர்ந்தும் நிறுவனம் தனது முதலீடுகளை மேற்கொள்ளும்' என்றார்.

சிபிஎல் நிறுவனம் தனது பிரதிபலிப்பை வெளிநாட்டு சந்தைகளுக்கு விஸ்தரித்து வரும் அதேவேளை, உள்நாட்டு சந்தை வாய்ப்பையும் விஸ்தரித்து வருகிறது. வௌ;வேறு சந்தைகளில் நிலவும் கேள்விகளுக்கு அமைய பொருட்களை வழங்கும் வகையில் தமது ஏற்றுமதி கொள்கை வகுக்கப்பட்டுள்ளதென நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி தயாரிப்புகளுக்கென சீதாவக்க பகுதியில் அமைந்துள்ள முதலீட்டு வலயத்தில் புதிய உற்பத்தி தொழிற்சாலையையும் நிறுவி வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .