Editorial / 2020 பெப்ரவரி 12 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளராக இலங்கையில் பிறந்து வளர்ந்த வித்யா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபொன்டெரா இலங்கை, இந்திய உபகண்டத்தின் வியாபார நடவடிக்கைகளுக்கு முகாமைத்துவ பணிப்பாளராக செயலாற்றிய சுனில் சேதி, நான்கு வருட காலமாக நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆக்கபூர்வமான வழியில் முன்னெடுத்துச் சென்றிருந்ததை தொடர்ந்து, இந்தியாவில் தமது குடும்பத்தாருடன் இணைந்து கொள்வதற்காக பணியிலிருந்து விடைபெற்றுச் செல்வதாக ஃபொன்டெரா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபொன்டெரா நிறுவனத்துடன் 15 வருட காலமாக பணியாற்றிய அனுபவத்தை வித்யா கொண்டுள்ளதுடன், அண்மையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா வியாபாரங்களின் முகாமைத்துவ பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
2020 ஏப்ரல் மாதம் வரை வியாபார நடவடிக்கைகளை சேதி மேற்பார்வை செய்வதுடன், பொறுப்புகளை கையளிக்கும் நடவடிக்கைகள் சுமூகமாக முறையில் இடம்பெறுவதையும் உறுதி செய்வார்.
4 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
33 minute ago