Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 09 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
HNB Finance கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளதால், முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர், கொழும்புப் பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலாவது நிறுவனம் என்பதுடன், அண்மையில் நடைபெற்ற அடிப்படை பங்கு விநியோகத்தின் வாயிலாக, பங்குச்சந்தைக்குள் பிரவேசித்தது.
பெப்ரவரி மாதம் இடம்பெற்ற, இந்த அடிப்படை பொதுப்பங்கு வெளியீடு, ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் 32% மிகைக் கோரல் பதிவாகி இருந்தமையின் விளைவாக, HNB Finance தொடர்பாக முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை, மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
HNB Finance நிறுவனம், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதுடன், மூலோபாய முதலீட்டாளர்கள் பலர் மேற்கொண்டு சென்ற வர்த்தக நடவடிக்கைகள், முறைகளைச் செயற்றிறனுடன் மேம்படுத்திக் கொள்வதற்காக, பல்வேறு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் நிறுவனத்தின் அடிப்படைத் தகவல்களைத் தொழில்நுட்பக் கட்டமைப்பு, விதிமுறைகளை வியாபாரத்தை இலக்காகக் கொண்டு, மென்மையான நடவடிக்கைகள் முறைகளுக்கு அமைய வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், தகவல்களின் பாதுகாப்புத் தன்மை, தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்குள் செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்துக் கொள்வதற்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
HNB Finance நிறுவனம், தனது டிஜிட்டல் சேவை மேம்பாடு தொடர்பாக, பாரிய முதலீடுகளை மேற்கொள்வதுடன், இணையத்தளம், திறன்பேசிகள் ஊடாகத் தமது நிதிச் சேவைகளை வழங்குவதற்கான தொழில்நுட்ப மேம்பாடுகளையும் மேற்கொள்ளும் எனவும் இந்நடவடிக்கைகள் மூலம், மிகவும் செலவு குறைந்த செயற்றிறனுடன் திறமையான சேவைகளை வழங்க முடியுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேடமாக, உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் சேவைகளுக்கான தேவை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் பின்னணியை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்படும் இந்த முதலீடுகள், காலத்துக்கு ஏற்றவையாகக் கருத முடியும் எனவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .