2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

சிக்னேச்சரின் முகக் கவசங்கள்

Editorial   / 2020 ஜூன் 05 , பி.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிக்னேச்சர் (Signature) வர்த்தகக் குறியீட்டுடனான முகக் கவசத்தை, அறிமுகம் செய்துள்ளது. இது, தொழில்சார் பணிச் சூழலின் தோற்றப்பாட்டை முழுமையாக்குவது மட்டுமன்றி, மிக முக்கியமாக இன்று உலகெங்கும் பரவும் தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பளிக்கும் வல்லமைமிக்க ஒரு முதல்நிலை, தடுப்புக் கவசமாகவும் செயற்படும்.

சிக்னேச்சர் வர்த்தகக் குறியீட்டுடனான முகக் கவசங்கள், இறுக்கமான வழிகாட்டல்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டிருக்கின்ற அதேநேரத்தில், சுவாசிப்பதை எளிதாக்குவதன் மூலம், அதை அணிபவருக்கு முழுமையான சௌகரியத்தையும் உறுதி செய்கின்றது.

சிக்னேச்சர் வர்த்தகக் குறியீட்டுடான முகக் கவசங்கள், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தும் அதற்கடுத்தபடியாக, சௌகரியம், தரம், செலவுச் சிக்கனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 100 சதவீதமான மென்மையான பருத்தித் துணியால் (cotton-fabric) தயாரிக்கப்பட்டுள்ள, மூன்று அடுக்குகளைக் கொண்ட (Three-ply) இந்த முகக் கவசங்களில், மிகவுயர்ந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில், வெளிப்புற மற்றும் உட்புற துணி அடுக்குகளுக்கு நடுவில், மேலதிகமாக ஒரு துணி அடுக்கும் காணப்படுகின்றது. பல தடவைகள் கழுவி, மீளப் பயன்படுத்தக் கூடிய சிக்னேச்சர் முகக் கவசங்கள், இப்போது பல்வேறு நிறங்களிலும் கிடைக்கின்றன.

கூட்டாண்மை நிறுவனங்களில் இருந்து கிடைக்கப் பெறும் அனைத்துக் கொள்வனவுக் கட்டளைகளுக்குமான முகக் கவசங்கள், நாடெங்கும் உள்ள ஏதேனும் சிக்னேச்சர் காட்சியறைகள், ஏனைய சில்லறை ஆடை விற்பனை நிலையங்களின் மூலம் விநியோகிக்கப்படும். சிக்னேச்சர் உற்பத்திகளை அணுகிப் பெறக்கூடிய வசதி, மிகவும் பரந்தளவில் காணப்படுகின்ற நிலையில், தற்போது நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள வியாபார நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் பணிசார் ஏற்பாடுகள் தொடர்பான சிரமங்கள் எதுவுமின்றி, பல்வேறு வகையான சிக்னேச்சர் முகக் கவசங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--