2020 ஜூன் 04, வியாழக்கிழமை

தெற்காசியாவின் முதலாவது ‘நிகொன் எக்ஸ்பீரியன்ஸ் ஹப்’

Editorial   / 2019 மே 08 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகப் புகழ்பெற்ற ஜப்பானின் நிகொன் நிறுவனத்தின் புதிய சந்தைப்படுத்தல் பிரசார கொள்கைக்கமைய, ‘நிகொன் எக்ஸ்பிரஸ் ஹப்’ (Nikon Experience Hub (NEH)&) அண்மையில் பொடோ டெக்னிகா நிறுவனத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தது. ஜப்பானின் நிகொன் நிறுவனத்தின் இலங்கை சந்தைக்கான பொறுப்பதிகாரி ஷின்டாரோ நிஷிமுரா இந்த நிலையத்தை திறந்து வைத்தார். 

உலகின் பல நாடுகளில் இந்த ‘நிகொன் எக்ஸ்பீரியன்ஸ் ஹப்’ நிறுவப்பட்டுள்ளதுடன், தெற்காசிய நாடுகளில் இது நிறுவப்பட்ட முதல் நாடாக இலங்கை திகழ்கிறது. புகைப்பட கலைஞர்கள் துறையில் சகல பிரிவுகளையும் உள்வாங்கும் வகையில், வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கையின் பழைய,  மாபெரும் நிறுவனமாக பொடோ டெக்னிகா நிறுவனம் திகழ்கிறது.

பொடோ டெக்னிகா நிறுவனம் 1958ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், இது உலகப் புகழ்பெற்ற ஜப்பானின் நிகொன் கமராக்களுக்கு இலங்கையின் அங்கிகாரம் பெற்ற விநியோகத்தராக திகழ்கிறது.

நிகொன் எக்ஸ்பீரியன்ஸ் ஹப் என்பது சகல விதமான புகைப்படக் கலைஞர்களுக்கும், ஒரே கூரையின் கீழ் சகல விதமான நிகொன் கமரா மற்றும் கமரா லென்ஸ் ஆகியவற்றை கொள்வனவு செய்து கொள்ளக்கூடிய வசதியை வழங்குகிறது.

அதிகளவு இடவசதிகளை கொண்டுள்ள இந்தக் காட்சியறை, நிறுவனசார் ஊழியர்களின் தலையீடின்றி, சுதந்திரமாக பார்வையிட்டு அவற்றை கையிலெடுத்து செயற்படுத்தி பார்த்து, தேவையென்றால் கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ள உயர் ரக காட்சியறை மற்றும் விற்பனை தொகுதியாக அமைந்துள்ளது.

ஜப்பானின் நிகொன் நிறுவனம், இது போன்ற காட்சியறைகளை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் நிறுவியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X