2020 ஜூன் 06, சனிக்கிழமை

புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ்: அம்பலாந்தோட்டையில் பிராந்திய அலுவலகம்

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ் அம்பலாந்தோட்டை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது. பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தக் கிளை புதிய முகவரிக்கு இடம்மாற்றப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இலக்கான சகல வசதிகளையும் படைத்த, கிளை வலையமைப்பைக் கொண்டிருப்பதைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தக் கிளை இடமாற்றம் அமைந்துள்ளதுடன், மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சௌகரியமான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு வழிகோலுவதாகவும் அமைந்துள்ளது.   

யூனியன் அஷ்யூரன்ஸின் அம்பலாந்தோட்டைக் கிளை அலுவலகம், பெருமளவு இடவசதிகளுடன் அமைந்துள்ளதுடன், மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 5 மணி வரை திறந்திருக்கும். ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு சேவைப் பகுதி, ஊழியர்களுக்கான பயிற்சி நிலையம் மற்றும் மேலும் பல வாடிக்கையாளர் வசதிகள் போன்றன இங்கு காணப்படுகின்றன.

தனிநபர்கள், வியாபாரங்கள் போன்றவற்றுக்கு பரந்தளவு காப்புறுதி தீர்வுகள் யூனியன் அஷ்யூரன்ஸினால் வழங்கப்படுகின்றன. இந்தப் புதிய கிளை அலுவலகத்திலும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சகல பிரத்தியேக நிதி ஆலோசகர்களுக்கும் மடிக் கணினிகள்,  டெபலட்கள் போன்றன வாடிக்கையாளர்களுக்கு துரிதமாகவும் இலகுவாகவும் சேவைகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ளன.  

தனது ஊழியர்களுடன் சிறந்த சூழலில் பணியாற்றுவது தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியாக கவனம் செலுத்தி வருகிறது. அவ்வாறு செயலாற்றுவதனூடாக, எந்தவொரு வாடிக்கையாளரும் எதிர்பார்க்கும் சௌகரியமான சேவைகள் வழங்கப்படும்.

புதிய உள்ளக அம்சங்கள், ஒளியூட்டல் கட்டமைப்புகள், பிறிதான ஓய்வெடுக்கும் பகுதிகள் போன்றன கிளைக்கு புத்துணர்வான தோற்றத்தை வழங்கும் என்பதுடன், நிறுவனத்துக்குள் பணியாற்றும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். நிலைபேறான சூழலில் ஊழியர்களுக்குப் பணியாற்றுவதற்கான ஆரோக்கியமான, சூழலுக்கு நட்பான அலுவலக உள்ளம்சங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவியுள்ளது.

கிளையின் புத்துணர்வான தோற்றத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவம் சேர்க்கப்படுவதுடன், கிளைக்கு விஜயம் செய்யும் போது, கிளை ஊழியர்களுடன் அதிகளவு நட்பான வகையில் தொடர்புகளை பேணக்கூடியதாக இருக்கும்.  

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட அம்பலாந்தோட்டை பிராந்திய அலுவலகம், இல. 153, தங்காலை வீதி, அம்பலாந்தோட்டை எனும் முகவரியில் அமைந்துள்ளது.

நாட்டில் 30 வருட காலத்துக்கும் மேலாக, மக்களின் வாழ்க்கைக்கு வளமூட்டி, வாழ்க்கையை மாற்றியமைக்கும் பிணைப்புகளை ஏற்படுத்தி வரும் பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X